கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரடைப்பு காரணமாக மரணம்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரடைப்பு காரணமாக மரணம்.


பெங்களூர் விக்ரம் மருத்துவமனையில் காலை 11.30 மணியளவில் அனுமதிக்கப்பட்ட நிலையில். உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, நடிகர் புனித் ராஜ்குமார் மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருப்பதாகவும், தற்போதைய நிலையில் எதையும் உறுதியாகச் சொல்லும் வகையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துவரப்படும்போதே மிகவும் ஆபத்தான நிலையிலிருந்ததாகவும், தற்போது அவர் ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை பெறுவதாகவும் விக்ரம் மருத்துவமனையின் மருத்துவர் ரங்கநாத் நாயக் தெரிவித்தார்.

நடிகர் புனித் ராஜ்குமார் கவலைக்கிடமான தகவலறிந்த ரசிகர்கள், திரையுலகினர் அவர் நலமடைந்து திரும்பிவர வேண்டுமென பிரார்த்தனை செய்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக மருத்துவமனை அறிவித்த உடன் . அவரது ரசிகர்களும், கன்னட, தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைத்துறை பிரபலங்களும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.கன்னடத்து ரசிகர்களால் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் புனித் ராஜ்குமார், திரையுலக ஜாம்பவான்களான நடிகர் ராஜ்குமார், பர்வதம்மாளின் மகனாவார்.திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான புனித் ராஜ்குமார் 29 க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர். 1985 ஆம் ஆண்டு பெட்டடா ஹூவு என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை வென்றார்.  சலிசுவா மொதகழு, எர்ரட நக்ஷத்ரகழு போன்ற படங்களுக்காக கர்நாடக மாநிலத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை இரண்டு முறை பெற்றிருக்கிறார்.


2002 ஆம் ஆண்டு அப்பு என்ற படத்தில் முதன் முறையாக கதாநாயகனாக அறிமுகமான போதிலிருந்து அவரின் ரசிகர்கள் அவரை அப்பு என  அழைக்கின்றனர். அபி, வீர கன்னடிகா, அஜய், அரசு, ராம், ஹுதுகரு, அஞ்சனி புத்ரா போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றார். இவரின் நடிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் யுவரத்னா என்ற படம் வெளியாகியது.1999 ஆம் ஆண்டு அஷ்வினி ரேவந்த் என்பவரை திருமணம் செய்த புனித் ராஜ்குமாருக்கு, இரண்டு குழந்தைகள். புனித் ரஜ்குமாரின் குடும்பம் முழுவதுமே திரைத்துறையில் உள்ளனர். சிவ ராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் என அவரின் இரண்டு சகோதரர்களும் நடிகர்களாவர். மேலும் இவரின் சகோதரரின் இரு மகன்களான வினய் மற்றும் யுவா ஆகியோரும் நடிகர்களாவர். இவர்கள் குடும்பத்தில் மொத்தம் 12 பேர்திரைத்துறையில் நடிகர்களாகவும், இயக்குமர்களாகவும், நடிகையாகவும் இருந்து வருகின்றனர் அவரது குடும்பம் சார்ந்த 48 இலவச பள்ளிக்கூடங்கள் ,26 ஆதரவற்றோர் இல்லங்கள் ,16 முதியோர் இல்லங்கள் ,1800 மாணவ , மாணவியரின் கல்வி ,என தன் வருமானத்தை தனக்காக மட்டுமில்லாமல் மக்களுக்கான

பயனுக்காகவும் என வாழ்ந்து வந்த கன்னட திரையுலகின் மன்னன் புனித் ராஜ்குமார் .46 வயதில் மரணத்திலும் தன் கண்களை தானமாக வழங்கி பார்வையற்ற ஓர் பாமரனின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார்‌

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா