காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மற்றும் துணை தலைவர் விடுத்த செய்திகள்

குடியரசுத் தலைவர் செயலகம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் விடுத்துள்ள தகவல்


காந்தி ஜெயந்தி, நாளை கொண்டாப்படுவதை முன்னிட்டு, கீழ்கண்ட தகவலை குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் விடுத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் விடுத்துள்ள செய்தியில், ‘‘தேசத்தந்தையின் 152வது பிறந்த தினத்தை முன்னிட்டு, நன்றியுள்ள நாட்டின் சார்பில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.

அகிம்சை இயக்கத்துக்காக உலகம் முழுவதும் சிறப்பாக அறியப்பட்டவர் காந்திஜி. அவரது பிறந்த தினம் அகிம்சை தினமாக கொண்டாடப்படுகிறது. அகிம்சை ஒரு தத்துவம், கொள்கை மற்றும் ஒரு அனுபவம். இது சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமையும்  என காந்திஜி நம்பினார்.  அவர் சுயராஜ்ஜியத்தை அடைவதற்கும், தீண்டாமையை ஒழிப்பதற்கும், சமூக தீமைகளை ஒழிப்பதற்கும், நமது விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் மற்றும் பெண்கள் மேம்பாட்டுக்கும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.

காந்தி ஜெயந்தி, அனைத்து இந்தியர்களுக்கும் சிறப்பான நாள். காந்திஜியின் போராட்டம் மற்றும் தியாகத்தை நாம் நினைவு கூறும் சந்தர்ப்பம் இது. நமது நாட்டு மக்கள் , நாட்டின் வளம் மற்றும் மேம்பாட்டுக்கு பணியாற்ற இந்த நிகழ்வு நம்மை ஊக்குவிக்கிறது.

காந்தியடிகளின் போதனைகள், கருத்துக்கள் மற்றும் மதிப்புகளை பின்பற்றி, இந்தியாவை அவரது கனவு நாடாக மாற்றுவதற்கு நாம் தொடர்ந்து பாடுபட உறுதி ஏற்போம்’’ என்று கூறியுள்ளார்.

மேலும் 

குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்

காந்தி ஜெயந்தி நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

‘‘தேசத்தந்தை - மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’

அநீதிக்கு எதிராக புதிய போராட்ட வழியை, மகாத்மா காந்தி காட்டினார் - அது உண்மை மற்றும் அகிம்சை மற்றும் இது  மனிதகுலத்தின் மீது ஒரு நிரந்தர முத்திரையை விட்டுச்சென்றது.  சத்தியாகிரகம் மற்றும் அகிம்சை முறையில், காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவை விடுவிக்க அவர் முயற்சிகள் மேற்கொண்டார்.  21ம் நூற்றாண்டில் கூட, அவர் ஒடுக்கப்பட்டவர்களின் சாம்பியனாகவும், அடையாளமாகவும் உள்ளார். 

காந்திஜி அவரது அனுபவம் மூலம் வாழ்ந்தார். அவரது வாழ்க்கையே அவருக்கு பாடம் என அவர் கூறினார். அவரது வாழ்க்கை, நிலையான வளர்ச்சி மீதான தத்துவம், பின்தங்கியவர்களின் மேம்பாடு, கிராம சுயராஜ்ஜியத்துக்கான உந்துதல், ஆகியவற்றில் இருந்து நாம் உத்வேகம் பெற முடியும்.

காந்திஜியின் சிந்தனையில் உள்ள இந்த கருத்துக்கள், நவீனகாலத்துக்கும் ஏற்றதாக உள்ளது. அவரது வாழ்க்கை, நாட்டுக்கு தொடர்ந்து கலங்கரை விளக்கமாக இருந்து, நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டுகிறது.

அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்திற்கான நமது பகிரப்பட்ட தேடலில், காந்திஜியின் அகிம்சை கொள்கை, நம்மையும், பிறநாடுகளையும் தொடர்ந்து வழிநடத்தும். 

மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நமது நாட்டு மக்களுக்கு, நான் மீண்டும் ஒரு முறை எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெய் ஹிந்த்!’’

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்