கட்டுச்சோறு விற்பவனின் கையறு நிலை. புதிதாய் வந்த தமிழனின் தூக்குச்சட்டி

கட்டுச்சோறு விற்பவனின் கையறு நிலை. புதிதாய் வந்த தமிழனின் தூக்குச்சட்டி .


வழிநடை உணவு - இதனைத் தான் கட்டுச்சோறு என்போம் 1980 வரை இந்த முறை மட்டுமே 2000 ஆண்டு பிறந்த பிறகு தமிழகத்து மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் மாற்றம் சிலருக்கு நகரங்களில் வாழக் குடிபெயர்ந்த நிலையில் ஆங்கில  மற்றும் சைனர் உணவுப் பழக்கம் ஒட்டிக் கொண்டு விட்டது சொமோடோ போல வீடுதேடி உணவுகள் வந்தது அதனால் காணாமல் போனது தமிழகத்தின் தூக்குச்சட்டி அதை இன்றைய இளையோர் சமுதாயம் அசிங்கமானதென ஒதுக்கியது தான்  விந்தை !புதுமையான கட்டுச்சோறு விற்பனை செய்யும் நிறுவனங்கள் வந்த பிறகு தமிழ் மொழி உள்ளிட்ட உணவுக் கலாச்சாரமும் மாறியது. தற்போதுள்ள நிலையில் நமது மொழியை உதாசீனம் செய்யும் நிலைக்கு வந்தது. ஒரு பக்கம் தற்சார்பு சூழலியல் பன்னாட்டு நிறுவனங்களின் தொழிலாளர் நலனுக்கு எதிராக பேசியே ஆக வேண்டும்.இன்னொரு பக்கம் சொமாட்டோ, சிவிக்கி என்று அனைத்து வெளிநாட்டுச் சேவைகளையும் யாராவது எதிர்த்து பதிவிட்டால்  அதில் போய் பெருமை பேசும் கூட்டம்.
தமிழ்நாட்டில் அனைத்து வகை கைத்தொழில் சார்ந்த உடலுழைப்பைத் தருவது வட இந்தியர்கள் தான். அவர்கள் முதலாளி வாடிக்கையாளர்கள் இந்தியில் பேசித் தான் அவர்களின் காலம் ஒடுகிறது. இது நடைமுறை.

அவர்களும் தமிழ் கற்று வேலை செய்யத் துவங்கி விட்டார்கள்.

"பாய் தோ பானிப் பூரி" ன்னு கேட்கற பயலுங்க தான் வடகத்தியானை விரட்டியடிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

நாட்டுப்பற்று, மரபு மாறாமல் வாழ்க்கை, இயற்கை மீதான அக்கறை என்பது வாழ்வியல். முகநூலில் புழங்கிப் பெருமை பேசுவதல்ல. என்பது உணராத நிலையில்நடைமுறை எதார்த்தங்கள் என்பதையும், சமூக ஊடக தன் முனைப்பு, தன் விளம்பர பிழைப்புவாதம் என்பதும் நேர் எதிர்த் துருவங்களாகும். 

சொமாட்டோ செயலியை பதிவிறக்கம் செய்யும் போது யாருக்கும் விரல்கள் நடுங்கவில்லை என்றால் !அவர்கள் பேசும் மனிதம் என்பது என்ன வகையானது ? என்று அவர்களிடமே விட்டு விடலாம். 


மேலும் வேலை இல்லாமலிருந்த அரைகுறையாக படித்த வேலையற்ற  பலருக்கு எடுப்புச் சாப்பாடு வழங்கும் வேலை தருகிறது சொமோட்டோ எனும் வாதம் இனி என்ன ஆகும்? மொழிக்கலாச்சாரமா பிழைப்பு வாதமா ? உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோவில் (Zomato) தமிழகத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவர் உணவு ஆர்டர் செய்த பிரச்சினை ஏற்பட்டதும் வாடிக்கையாளர் சேவை முகவரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதற்கு அந்த வாடிக்கையாளர் சேவை முகவரோ, “ஹிந்தி நம் தேசிய மொழி. நம் தேசிய மொழியை கொஞ்சமாவது கற்றுக்கொள்வது நல்லது” என்று கூறியுள்ளார்.

இதை சமூக வலைதளமான ட்விட்டரில் பகிர்ந்தார் விகாஷ். தமிழகத்தில் தொழில் செய்யும் சொமாட்டோ நிறுவனம் தமிழ் தெரிந்த ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும், இந்தி நம் நாட்டின் தேசிய மொழி இல்லை எனவும் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்தன.


மேலும், சொமாட்டோ நிறுவனத்தை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி Reject Zomato என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டாகிற நிலையில், இந்த விவகாரம் குறித்து சொமாட்டோ நிறுவனம் விளக்கமளித்து மன்னிப்பும் கேட்டுள்ளது குறித்து சொமாட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணக்கம் தமிழ்நாடு! எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம். பணிநீக்கம் என்பது சரியான நெறிமுறையென நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கெதிராக கருத்தைப் பகிரக்கூடாது என தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம். இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள், மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை.

ஒரு நிறுவனமாக நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். நாங்கள் ஏற்கெனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்துதல் முயற்சிகளை உள்ளுர்மயமாக்கியுள்ளோம். மேலும் கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழ் கால் செண்ட்டர் மற்றும் சர்வீஸ் செண்ட்டரை உருவாக்கும் பணியிலுள்ளோம். ’சோத்துக்கு ஆர்டர இந்தியில போடு, அதுதாண்டா தேசியமொழி; தமிழ் தெரியாது போடா’ ன்னு அதிகாரமாஙச் சொல்கிறான் சொமோட்டாக்காரன்…’இனிமேல் சோத்துக்கு ஆர்டர  உங்கிட்ட போடமாட்டோம்’ னு சொமோட்டோ ‘ஆப் பை, நிறைய மக்கள் அன் -இன்ஸ்ட்டால் செய்துட்டாங்க…

வருமானம் போச்சேன்னு, பதறிப்போன சொமோட்டோ’உரிமையாளர்கள்;

’அந்தப் பணியாளை நீக்கிட்டோம்' என தரையில்

படுத்தே விட்டார்கள். இனிமேல், ”எண்பது சதவிகிதம் ‘ஆஃபர்’ முறையில் சொமோட்டோ சோறு போடறோம்” னு அறிவிக்கற லெவல்ல நிலைமை போகிறது..

’ஆப்' பை, அன் -இன்ஸ்ட்டால் செய்த மக்கள்  மறுபடியும் இன்ஸ்ட்டால் பண்ணுவாங்களா ? இல்லை புதுசா முளைத்து வந்த தூக்குச்சட்டிக்கு மாறுவார்களா என்பதை காலம் முடிவு செய்யும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா