விமானப்படை கபடி போட்டி

பாதுகாப்பு அமைச்சகம்  விமானப்படை கபடி போட்டி


விமானப்படை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் விமானப்படை கபடி போட்டியை 2021 செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 1 வரை பராமரிப்புப் பிரிவு தலைமையகத்தின் சார்பாக, கள செப்பனிடுதல் பணிமனை, பாலம், நடத்தியது.

கள செப்பனிடுதல் பணிமனை, பாலம், விமானப்படை தலைமை அதிகாரி ஏர் கமோடோர் எஸ் எஸ் ரேஹல் 2021 செப்டம்பர் 27 அன்று விமானப்படை கபடி போட்டியை தொடங்கி வைத்தார். விமானப்படையின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த 120 வீரர்கள் எட்டு அணிகளில் இதில் பங்கேற்றனர்.

2021 அக்டோபர் 1 அன்று நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக கள செப்பனிடுதல் பணிமனை, பாலம், விமானப்படை தலைமை அதிகாரி ஏர் கமோடோர் எஸ் எஸ் ரேஹல் கலந்து கொண்டார். வெற்றி பெற்றவர்களை பாராட்டிய அவர், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று விமானப்படைக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்குமாறு அவர்களை கேட்டுக்கொண்டார். 


அர்ஜுனா விருது பெற்ற திரு ராம் மேஹர் சிங் மற்றும் திரு அனூப் சிங் மற்றும் துரோணாச்சார்யா விருது பெற்ற திரு பல்வான் சிங் ஆகியோரும் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்