பிரதமர் அலுவலகம் திரைப்பட நடிகர் திரு.நெடுமுடி வேணு மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திரைப்பட நடிகர் திரு.நெடுமுடி வேணுவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“திரு.நெடுமுடி வேணு பன்முகத் திறமைகள் வாய்ந்த நடிகராக விளங்கினார். பலவிதமான கதாப்பாத்திரங்களின் வாழ்க்கையை அவரால் சித்தரிக்க முடிந்தது. தலைமுறை தாண்டிய எழுத்தாளராகவும் இருந்த அவர் திரைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவரது மறைவு திரை உலகத்திற்கும் கலாச்சார உலகத்திற்கும் இழப்பாகும். அவரது குடும்பத்திற்கும், அவரின் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று பிரதமர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்