நொடிப்பு மற்றும் திவால் நிலை குறித்து பயிற்சியாளர்களுக்கு பயிற்சி திட்டம்

நொடிப்பு மற்றும் திவால் நிலை குறித்து பயிற்சியாளர்களுக்கு பயிற்சி திட்டம்: ஐபிபிஐ (இந்திய திவால் மற்றும் நொடிப்பு நிலை வாரியம்) நடத்தியது


விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக,  இந்திய திவால் மற்றும் நொடிப்பு நிலை வாரியம் (ஐபிபிஐ), இங்கிலாந்தின் வெளிநாட்டு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்துடன் (எப்சிடிஓ) இணைந்து பயிற்சியாளர்களுக்கான 2 நாள் பயிற்சியை நடத்தியது. இதில் திவால் பிரச்னைகளைத் தீர்க்கும் நடைமுறைக்கு உதவும், மாற்று சர்ச்சை தீர்வு நுட்பங்களின் பயன்பாடு ” குறித்து  கடந்த 22 மற்றும் 23ம் தேதிகளில் ஆன்லைன் மூலம் ஆலோசிக்கப்பட்டன.


இந்தப் பயிற்சித் திட்டம் இந்தியாவில் உள்ள திவால் கட்டமைப்பின் திறன் மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்தியது.  இதில் பங்கேற்றவர்களுக்கு, சர்ச்சைகளை வேறு வழியில் பார்ப்பது, சமரசத் திட்டத்தின் திறன், மிதமான மதிப்பீடுகளின் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. இந்த பயிற்சி, இதில் பங்கேற்றவர்களின் திறன்களை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஐபிபிஐ முழு நேர உறுப்பினர் டாக்டர் திருமிகு முகுலிதா விஜய வர்க்கியா துவக்கவுரை நிகழ்த்தினார். சர்ச்சைத் தீர்வுகளின் மாற்று தொழில்நுட்பங்களுக்கான  நன்மை குறித்தும் அவர் எடுத்துரைத்தார். மேலும் திவால் சட்டங்களில் பல அம்சங்கள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா