பாதுகாப்புத்துறை எலக்ட்ரானிக்ஸ் பயன்பாடுகள் ஆய்வகத்தை பார்வையிட்டார் மத்திய இணையமைச்சர்

பாதுகாப்பு அமைச்சகம்  பாதுகாப்புத்துறை எலக்ட்ரானிக்ஸ் பயன்பாடுகள் ஆய்வகத்தை பார்வையிட்டார் மத்திய இணையமைச்சர்திரு அஜய் பட்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின்(டிஆர்டிஓ) முன்னணி ஆய்வு கூடமான பாதுகாப்புத்துறை எலக்ட்ரானிக்ஸ் பயன்பாடுகள் ஆய்வகத்தை(டீல்), டேராடூனில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் நேற்று பார்வையிட்டார். 

டீல் இயக்குனர் திரு பி.கே. சர்மா, ஆய்கவத்தின் திட்டங்கள் மற்றும் தயாரிப்பு நிலவரம் குறித்து விளக்கினார்.டீல் ஆய்வகத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்திய மத்திய அமைச்சர் திரு அஜய்பட், பாதுகாப்புத்துறை தளவாட உற்பத்தியில் தனியார் நிறுவனங்களையும் ஊக்குவிக்க ஆலோசனைகள் வழங்கினார்.

பாதுகாப்புத் துறைகளுக்காக டீல் ஆய்வகம் தயாரித்த எஸ்டிஆர், ஜிசாட்-6 டெர்மினல்கள், ட்ரோபோஸ்கேட்டர் மோடம், எச்டி - விஎல்ப் தகவல் தொடர்பு சாதனம், ஆளில்லா விமானங்கள் குறித்து மத்திய அமைச்சரிடம் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா