சென்னையில் தசரா விழாக்காலப் பேருந்துகள் இயக்கம் வழித்தடம் விபரம்

தசரா விழாக்கால சென்னை பேருந்துகள் இயக்கம் வழக்கம் போல் எஸ்.இ.டி.சி. அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன


பூந்தமல்லி உயர் சாலை, வானகரம்,நசரத்பேட்டை, வெளி வட்டச் சாலை வழியாக வண்டலூரைச் சென்றடையும். இந்த பஸ்கள் தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூர் வழியாகச் செல்லாது. கோயம்பேட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி  பேருந்துகள் பூந்தமல்லி உயர் சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை, மதுரவாயல் சுங்கச்சாவடி  மற்றும் பெருங்குளத்தூர் வழியாகச் செல்ல வேண்டும். கிழக்குக் கடற்கரைச் சாலை நோக்கி தனியார் ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, கத்திப்பாரா, கிண்டி, சர்தார் வல்லபாய் படேல் சாலை வழியாக அனுமதிக்கப்படும். இந்தப் பேருந்துகள் காவல்துறையினரின் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டியபடி செல்ல வேண்டும்.* ஆம்னி தனியார் பேருந்துகள் 100 அடி சாலை, சி.எம்.ஆர்.எல்., ஆலந்தூர் மெட்ரோ, கே.கே.நகர் முன் பூந்தமல்லி உயர் சாலை ஆகியவற்றில் பயணிகள் ஏறுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக அந்தப் பயணிகளை கோயம்பேடு, தாம்பரம் அல்லது வண்டலூரிலிருந்து ஏறுமாறு ஏற்பாடுகள் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கோயம்பேட்டில் இருந்து அனைத்து பயணிகளுடன் புறப்படும் தனியார் ஆம்னி பேரூந்துகள் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரைத் தவிர்த்து வண்டலூரை அடைய பி.எச் சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளி வட்டச் சாலை வழியாகச் செல்ல வேண்டும். பயணிகள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என தகவல் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா