குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டால் பொய் வழக்குகள் போட்ட காவல்துறை அதிகாரிகளுக்குத் தண்டனை - உச்சநீதிமன்றம் உத்தரவு

கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டால் பொய் வழக்குகள் போட்ட காவல்துறை அதிகாரிகளுக்குத் தண்டனை - உச்சநீதிமன்றம் உத்தரவு


கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்த கீழமை நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானால், வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்று அணைத்து மாநில மற்றும் யூத பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் 46 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் சி.கே.பிரசாத், ஜே.எஸ்.கெஹர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது காவல்துறையினர் மேற்கொள்ளும் மோசமான விசாரணையினால் நாடு முழுவதும் பல உண்மையான கிரிமினல் வழக்குகளில் ஊழல் காரணமாக மெத்தனமாகக் கையாளும் நிலையில் குற்றவாளிகளின் விடுதலை அதிகரித்து வருவது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

இது போன்ற வழக்குகளில், குற்றவாளிகளின் விடுதலைக்குக் காரணமான தவறு செய்யும் விசாரணை காவல்துறை அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, அணைத்து மாநில அரசுகளுக்கு நீதிபதிகளின் உத்தரவில்  கூறியுள்ளதாவது-


“குற்றவாளிகள் தண்டிக்கப்படவும், நிரபராதிகள் மீது வழக்குத் தொடராமல் இருக்கவும் காவல்துறை அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிப்பதற்கு ஆறு மாதங்களில் புதிய அமைப்பை  அணைத்து மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் விடுதலையாகும்போது நீதி வழங்கும் முறை தோல்வி அடைவதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு விடுதலையும், தவறான நபர் ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.


குற்றவாளிகள் விடுதலை செய்யப்படும் வழக்குகளின் தீர்ப்புகளை ஒவ்வொரு மாநில அரசுகளின் உள்துறையும் தீவிரமாக ஆய்வு செய்து அந்த வழக்கு தோல்வி அடைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்து பதிவு செய்ய வேண்டும். வழக்கு விசாரணை மற்றும் நீதிமன்றங்களில் நடைபெற்ற விசாரணையின் போது நடந்த தவறுகள் என்ன என்பதையும் அதற்குக் காரணமான அதிகாரிகளையும் கண்டறிந்து, அவர்கள் மீது இலாகா பூர்வமாக நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்”.


இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் ஊழல் செய்து குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் அதிகாரிகள்


மற்றும் போலி வீராப்பு காட்டும் பொய்வழக்கு பதிவு செய்யும் காவல்துறை அதிகாரிகள் இனி அதுபோல செய்யும் நடவடிக்கையில் இத் தீர்ப்பு மாற்றம் ஏற்படுத்தும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா