மருத்துவத் தாவரங்களுக்கான தரமான இடுபொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்க உயிரி ஆதார தொழில்நுட்பம்

ஆயுஷ்  மருத்துவத் தாவரங்களுக்கான தரமான இடுபொருட்களுக்காக ஹிமாலயன் உயிரி ஆதார தொழில்நுட்ப நிறுவனத்துடன் என்எம்பிபி கூட்டு


மருத்துவ தாவரங்களுக்கான தரமான இடுபொருட்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக ஹிமாச்சலப் பிரதேசத்தின் பலாம்பூர் பகுதியில் உள்ள ஹிமாலயன் உயிரி ஆதார தொழில்நுட்ப நிறுவனத்துடன் தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் (என்எம்பிபி) கைகோர்த்துள்ளது.


ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம், மருத்துவ தாவரங்களின் வர்த்தகம், ஏற்றுமதி, பாதுகாப்பு மற்றும்


விளைச்சலுக்கான வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக பணியாற்றுகிறது.


தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள மருத்துவ தாவரங்கள் மற்றும் மூலிகைகளுக்கான தரமான இடுபொருட்கள் உருவாக்கத்திற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இரு அமைப்புகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மிக உயரமான இடங்களில் வளரும் அரிய வகை தாவரங்களும் இதில் அடங்கும். 


அதிக விளைச்சல் மற்றும் வேளாண் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஆராய்ச்சியை ஹிமாலயன் உயிரி ஆதார தொழில்நுட்ப நிறுவனம் மேற்கொள்ளும் அதே வேளையில், மாநில மருத்துவ தாவர வாரியம், மாநில ஆயுஷ் அமைப்புகள், மாநில தோட்டக்கலைத்துறை மற்றும் நாடு முழுவதும் உள்ள பிராந்திய மையங்கள் உள்ளிட்ட தனது செயல்பாட்டு முகமைகள் வாயிலாக தரமான இடுபொருட்கள் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் ஆதரவளிக்கும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்