ஆவடி, தாம்பரம் மாநகரக் காவல்துறை ஆணையர் களுக்கான காவல்நிலையங்களின் எல்லைகள்

ஆவடி, தாம்பரம் மாநகரக் காவல்துறை ஆணையர் களுக்கான காவல்நிலையங்களின்  எல்லைகள் குறித்த அறிவிப்பை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்  சைலேந்திரபாபு வெளியிட்டார்.


சென்னை மாநகரம் விரிவடைந்த நிலையில் நிர்வாக வசதிக்காக சென்னை,தாம்பரம், ஆவடி என மூன்றாகப் பிரிக்கப்பட்டது. ஆவடி காவல்துறை ஆணையராக ஏ.டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் காவல்துறை ஆணையராக ஏ.டி.ஜி.பி., ரவியும் நியமிக்கப்பட்டு அதற்கு  உட்பட்ட எல்லைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


                  தாம்பரம் காவல்துறை ஆணையர்

கட்டுபாட்டில் 20  காவல் நிலையங்கள் ஒதுக்கப்பட்டன. அவை தாம்பரம், குரோம்பேட்டை, செய்யூர், சிட்லப்பாக்கம், பீர்க்கங்கரணை, குன்றத்துார், பல்லாவரம், சங்கர்நகர், பள்ளிக்கரனை, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகிநகர், கானாத்துார்.


மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து சோமங்கலம், மணிமங்கலம் தாம்பரத்தில் இணைக்கப்பட்டது .செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், தாழம்பூர், கேளம்பாக்கம் ஆகிய காவல் நிலையங்கள் தாம்பரம் காவல்துறை ஆணையரின் கீழ் செயல்படும்.


ஆவடி காவல்துறை ஆணையருக்கு


25 காவல் நிலையங்கள் ஒதுக்கப்பட்டன. அவை மில்க் காலனி, செங்குன்றம், மணலி, சேதங்காடு, மணலி புதுநகர், எண்ணுார், மாங்காடு, பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, முத்துபுதுபேட்டை, பட்டாபிராம், அம்பத்துார் எஸ்டேட், கொரட்டூர், திருவேற்காடு, எஸ்.ஆர்.எம்.சி., ஆவடி, டேங்க் பேக்டரி, திருமுல்லைவாயல், திருநின்றவூர். மேலும்


 

திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து வேலவேடு, செவ்வாபேட்டை, சோழவரம், மீஞ்சூர், காட்டூர் ஆகிய காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா