அனிச்சகுடி கிராமத்தில் காளி கோவில் வழிபாட்டில் பிரச்சினை விசாரிக்க முயன்ற காவல்துறை சார்பு ஆய்வாளர் மீது தாக்குதலில் பலத்த காயம்

இராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் ஒன்றியம் அறியங்கொட்டை பகுதி அனிச்சகுடி  கிராமத்தில் காளி கோவில் வழிபாட்டில் 


பிரச்சினைகள் செய்த வீரப்பன் எனும் மலைராஜ் (வயது 45) என்பவரை தேடி காவல்துறை சார்பு ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் தலைமைக் காவலர் கண்ணன் ஆகியோர் அனிச்சகுடி கிராமத்திலுள்ள அவரது வீட்டிற்க்குச் சென்றபோது மதுகுடித்த போதையிலிருந்த மலைராஜ் சார்பு ஆய்வாளர் தமிழ் செல்வனை இடது காதுக்கு மேல் தலையில் அரிவாளால் வெட்டியதால். பலத்த காயமடைந்த சார்பு ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. அவருக்கு ஏழு இன்ச் நீளம் 1 இன்ச் அகலத்துடன் ஏற்பட்ட வெட்டுப்பட்ட  காயத்திற்கு 13 தையல் போடப்பட்டுள்ளது.


மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காயமடைந்த தமிழ்ச்செல்வனை  சந்தித்தார்.அனிச்சகுடி கிராமத்துக் காளியம்மன் கோவில் வழிபடுவதில் இரு தரப்பினரிடையே   ஓராண்டுக்கும் மேலாக பிரச்சனை இருந்து வந்துள்ள நிலையில்  இன்று அனிச்சகுடியில் உள்ள  காளியம்மன் கோவிலுக்கு ஆர்.எஸ். மங்கலம் அதிமுக ஒன்றியச் செயலாளர் நந்திவர்மன் வழிபடச் சென்றபோது ஆலயத்தில் துரைராஜ் என்பவர் கோவில் பூஜை செய்து திருநீர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மற்றொரு தரப்பைச் சேர்ந்த மலைராஜ் என்பவர், துரைராஜ் என்பவரிடம்  வாக்குவாத்தில் ஈடுபட்ட நிலையில் தகராறு ஏற்பட்ட நிலையில்


இந்தப் பிரச்சினை தொடர்பாக ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்திற்குதீ தகவல் வந்ததையடுத்து விசாரிக்க  சார்பு ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் சென்று மலைராஜை  விசாரித்துக் கொண்டிருந்தபோது சார்பு ஆய்வாளருக்கும், மலைராஜுக்குமிடையே  வாக்குவாதம் ஏற்பட்டு அதில் மலைராஜ் திடீரென அரிவாளால்  சார்பு ஆய்வாளர் தமிழ்செல்வன் தலையில் வெட்டியதில் அவருக்குப் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டு ரத்தம் பீரிட்டதாகத் தெரிவித்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற்று வருகிறார்.

மலைராஜை ஆர்எஸ் மங்கலம் காவல் துறையினர் கைது செய்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் சின்ன கண்ணு  தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா