உடான் திட்டத்தின் கீழ் சிந்துதர்க் விமான நிலையத்தை தொடங்கி வைத்தார் ஜோதிர் ஆதித்யா சிந்தியா

உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் உடான் திட்டத்தின் கீழ் சிந்துதர்க் விமான நிலையத்தை தொடங்கி வைத்தார் திரு ஜோதிர் ஆதித்யா சிந்தியா


உடான் திட்டத்தின் கீழ், மகாராஷ்டிராவின் சிந்துதர்க் விமான நிலையத்தை, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்யா சிந்தியா, காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். முதல் விமானம் சிந்துதர்க்கிலிருந்து மும்பைக்கு தொடங்கி வைக்கப்பட்டது. 


மகாராஷ்டிரா முதல்வர் திரு உத்தவ் தாக்கரே, சிறப்பு விருந்தினராக காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்யா சிந்தியா பேசுகையில், ‘‘ சிந்துதர்க் விமான நிலைய தொடக்கம் மற்றும் மும்பைக்கு முதல் விமானம் தொடக்கம் ஆகியவை கொங்கன் பகுதி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை குறிக்கிறது. இந்த முன்னேற்றம், உள்ளூர் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்கான புதிய வழிகளை திறக்கும். இங்கு 5 ஆண்டுகளுக்குள் தினசரி விமானங்களின் எண்ணிக்கை 20 முதல் 25 ஆக அதிகரிக்கும் என்பது உறுதி’’ என்றார்.

உடான் திட்டத்தின் கீழ் 61வது விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தொடங்கியுள்ளது. தற்போது மக்கள் சிந்துதர்க் விமான நியைத்தில் இருந்து, மும்பைக்கு 85 நிமிடங்களில் பயணிக்க முடியும். முன்பு இந்த இரு நகரங்களுக்கு இடையே மக்கள், தரைவழியாகவும், ரயில் மூலமாகவும் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக பயணம் செய்ய வேண்டியிருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா