சூரத்தில் சௌராஷ்டிரா படேல் சேவா சமாஜ் விடுதி பூமி பூஜையில் பிரதமர் கலந்து கொள்கிறார்


பிரதமர் அலுவலகம்

சூரத்தில் சௌராஷ்டிரா படேல் சேவா சமாஜ் கட்டியுள்ள முதல் கட்ட விடுதியின் பூமி பூஜையில் பிரதமர் அக்டோபர் 15ம் தேதி கலந்து கொள்கிறார்


சூரத்தில் சௌராஷ்டிரா படேல் சேவா சமாஜ் கட்டிய முதல் கட்ட விடுதியின் பூமி பூஜையில் பிரதமர்  அக்டோபர் 15ம் தேதி காணொலி காட்சி மூலம் கலந்து கொள்கிறார்.

இந்த விடுதியில் 1,500 மாணவர்களுக்கு தங்கும் வசதிகள் உள்ளன. இந்த விடுதியில் கலையரங்கம் மற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக நூலகம் ஆகியவை உள்ளன. 500 மாணவிகள் தங்குவதற்கான,  இரண்டாம் கட்ட விடுதி கட்டும் பணி அடுத்த ஆண்டு தொடங்கும்.

சௌராஷ்டிரா படேல் சேவா சமாஜ் பற்றி:

இது கடந்த 1983ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை. இதன் முக்கிய நோக்கம், சமூகத்தில் பின்தங்கிய பிரிவினிரிடம்  கல்வி மற்றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்துதல் ஆகும். மாணவர்கள் பல போட்டித் தேர்வுகளுக்கு தயாராக  இது உதவுகிறது மற்றும் தொழில் முனைவு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான தளத்தை வழங்குகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது, குஜராத் முதல்வர் பங்கேற்பார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா