தொழிலதிபர் வணங்காமுடி மீது பெண் பரபரப்பு புகார்

நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா மாமனார் மீது பெண் தியாகராயநகர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார்.


  அது தொடர்பாக விபரம் வருமாறு நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவை இரண்டாவதாகத் திருமணம் செய்த விசாகனின் தந்தை வணங்காமுடி, தொழிலதிபராக இருக்கிறார். அபெக்ஸ் லேபரட்டரி  என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார் அந்த நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரராக இருப்பவர் முரளி ஸ்ரீனிவாசன், இந்நிலையில் முரளி சீனிவாசனின் இரண்டாவது  மனைவி எனக் கூறிய சத்தியபாமா என்பவர்

சென்னை தியாகராயநகர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ஸ்ரீனிவாசனுடன் ரகசியமாக வாழ்ந்து வருவதாகவும், தனக்கும் சீனிவாசனுக்கும் 8 மாதக் குழந்தை இருப்பதாகவும் சில நாட்களுக்கு முன்னர் கணவர் உடல்நிலை சரியில்லாமல் ஹைதராபாத்துக்கு சிகிச்சை பெற சென்றதாகவும், தற்போது தனது கணவரின் உடல்நிலை பற்றியும், அவரைப் பற்றிய எந்தத் தகவலுமில்லை என்றும், இதனால் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகர் ரஜினிகாந்தின் சம்பந்தியுமான வணங்காமுடியிடம் தான் விசாரித்ததாகவும், அப்போது வணங்காமுடி தனக்கு உதவி செய்வதாக கூறியதாகவும், அதேநேரத்தில் தனது கணவரின் முதல் மனைவியின் வீட்டுக்குச் சென்றபோது அவர் தன்னை அடித்து விரட்டிய தாகவும் கூறியுள்ளார். மேலும், நிறுவனத்தின் உரிமையாளர்  வணங்காமுடி ஆரம்பத்தில் உதவுவதாக கூறினாலும், தற்போது தன்னை வழக்கறிஞர் ஒருவர் மூலம் மிரட்டி வருவதாகவும் அந்தப் பெண் புகார் கூறியுள்ள நிலையில் தனது கணவர் முரளி சீனிவாசனை சொத்துக்காகவும், அல்லது ரகசிய ஆவணங்கள் பெறுவதற்காகவும், வணங்காமுடி அடைத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது கணவரை எங்கு வைத்துள்ளார்கள் என்பதைக் கூற மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டியவர் தன் கணவர் உயிருடன் இருக்கிறாரா?  என்பது தனக்குத் தெரிய வேண்டுமெனவும், தன்னை மிரட்டிவரும் வணங்காமுடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், ரஜினிகாந்தின் சம்பந்தியான வணங்காமுடியைப் பற்றி எந்த ரகசியத்தையும் தனது கணவர் தன்னிடம் கூறவில்லை எனவும், தனக்கும் தன் குழந்தைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சம்பந்தியின் மீது பெண் புகார் கொடுத்திருப்பது   பரபரப்பு நிகழ்வாகும்.மேலும் இந்த பெண் குற்றச்சாட்டில் உள்ள மெய்த்தன்மை விசாரணை முடிவில் தெரியலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா