நிலுவையில் உள்ள குறைகளை தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கினார்
பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நிலுவையில் உள்ள குறைகளை தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கினார்
இந்திய அரசில் நிலுவையில் உள்ள குறைகளை 2021 அக்டோபர் 2 முதல் 31-க்குள் தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரத்திற்கான பிரத்தியேக தளத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தொடங்கி வைத்தார்.
சாதாரண மக்களின் "வாழ்க்கை முறையை எளிதாக்கும்" வகையில் மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தின் மீது கவனம் செலுத்தி நிலுவையில் உள்ள குறைகளைத் தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளும் பிரச்சாரத்தின் போது மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
இந்திய அரசின் அனைத்து செயலாளர்கள், பிரச்சாரத்திற்காக நியமிக்கப்பட்ட அலுவலர்கள், இணைக்கப்பட்ட, துணை மற்றும் தன்னாட்சி அமைப்புகளிலிருந்து பல துறை தலைவர்கள் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு "குறைந்தபட்ச அரசு-அதிகபட்ச ஆளுகை" உடன் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டு வந்தது என்று கூறிய அமைச்சர், வெளிப்படைத்தன்மையின் மேம்பாடு இதன் முக்கிய குறிக்கோள் என்றார். 2014-ம் ஆண்டிலிருந்து 1500-க்கும் மேற்பட்ட வழக்கற்றுப் போன சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பொதுமக்கள் குறைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அரசுகளின் பரிந்துரைகள் மற்றும் அமைச்சகங்களுக்கிடையேயான ஆலோசனைகள், ஒவ்வொரு அமைச்சகம்/துறை மற்றும் அவற்றை சார்ந்த அலுவலகங்களின் நாடாளுமன்ற உறுதிமொழிகள் ஆகியவற்றுக்கு குறித்த காலத்தில் சிறப்பான முறையில் தீர்வு காண்பதே இந்த சிறப்பு பிரச்சாரத்தின் நோக்கம் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
கருத்துகள்