மின்சார வாரியத்தின் புகார் பதிவு செயல்பாடுகள் துரிதமாக நடைபெறுகிறது

மின்சார வாரியத்தின் புகார் பதிவு செயல்பாடுகள் துரிதமாக நடைபெறுகிறது. மின்னகம் மையத்தின் புகார் மையம் துவக்கி வைத்த போது நமது செய்தி வெளிவந்த நிலையில் தற்போது நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் மின்வாரியம்: எளிதில் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் விபரம் குறித்து நாமது பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் சார்பில் பரிசோதனை முயற்சியாக மின் கம்பிகள் செல்லும் பாதையிலிருந்த மரக் கிளைகள் குறித்து புகார் தொலைபேசி வாயிலாக சென்னையில்  பதிவு செய்த உடனே பத்து நிமிடத்தில் அடுத்ததாக சம்பந்தப்பட்ட சிவகங்கை மாவட்ட மின் புகார் மாவட்டம் சார்பாக அழைப்பு புகார் மாற்றம்  உறுதியாக சம்பந்தப்பட்ட மின்சாரப் பணியாளர்களுக்கு தெரிவித்த உடன் அவர்கள் குறை நிவர்த்தி செய்த முறை நாம் கடந்த ஆட்சியில் கண்ட ஊழல் மலிந்து போன அசட்டையான நிர்வாகம் இப்போது இல்லை என்பது புரிந்தது. மின் துறை தமிழ்நாட்டில் நன்றாக சீரமைப்பு செய்யப்பட்டதாகவே   உணர முடிந்தது. உண்மையான பாராட்டுக்கள் மின்துறை அமைச்சரான செந்தில் பாலாஜியையும் அவர் சார்ந்துள்ள துறை அலுவலர்களையும் சாரும் தற்போது அமைத்த மின் புகார் பதிவு முறை வெற்றி கண்டுள்ளது என்பதை நமது இதழ் உறுதிப்படுத்தியது. இதேபோல் பிற துறைகளில் மாற்றம் வந்தால் தமிழகத்தின் ஆட்சி பொற்கால ஆட்சியாகும் 


மின்சார சேவை தொடர்பான புகார்களை தெரிவிக்க அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தின் புகார் எண்ணைநுகர்வோர் எளிதில் அறிந்துக் கொள்வதற்காக, அவர்களுடைய மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் பணியை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது


தமிழகம் முழுவதும் உள்ள மின் நுகர்வோர்கள் மின்தடை, புதிய மின் இணைப்பு பெறுவதில் ஏற்படும் காலதாமதம் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான அனைத்துப் புகார்களையும், ஒரே இடத்தில் தெரிவிக்கும் வகையில், சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்னகம் நுகர்வோர் சேவை மையம் அண்மையில் திறக்கப்பட்டது.
இந்த மையத்தை 94987 94987 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். ஆனால், இந்த எண் பலருக்குத் தெரிவதில்லை. இதுகுறித்து, நுகர்வோர்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து, மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தின் எண்கள் அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை அனைத்து அலுவலகங்களிலும் ஒட்டுவதுடன், பெயின்ட்டால் எழுதப்பட வேண்டும்.

அத்துடன், 3.20 கோடி மின் நுகர்வோர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கும் புகார் எண்ணை குறுஞ்செய்தியாக அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்