பிரதமர் அலுவலகம் கர்நாடகாவில் வீடு இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகை வழங்கவும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.
“கர்நாடக மாநிலம் பெலகாவியில் வீடு இடிந்து விழுந்ததன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சோகமான இந்தத் தருணத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகையாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்: பிரதமர் @narendramodi நரேந்திர மோடி” என்று பிரதமர் அலுவலகம் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளது.
கருத்துகள்