குஷிநகரில் சர்வதேச விமான நிலையம் துவங்கி வைத்து ராஜ்கியா மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
குஷிநகரில் ராஜ்கியா மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். குஷிநகரில் பல வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், குஷிநகரில் மருத்துவக் கல்லூரித் தொடங்கப்பட்டுள்ளதால், மருத்துவர் ஆக வேண்டும், தரமான மருத்துவமனை வர வேண்டும் என்ற உள்ளூர் மக்களின் ஆசை நிறைவேறும். தேசிய கல்விக் கொள்கையின் கீழ், தொழில்நுட்பக் கல்வியை ஒருவரின் சொந்த மொழியில் பெறுவது நனவாகியுள்ளது. இதன் மூலம் குஷிநகர் இளைஞர்களின் கனவு நிறைவேறும் என பிரதமர் கூறினார். அடிப்படை வசதிகள் கிடைக்கும்போது, பெரிதாக கனவு காணுதல் மற்றும் அவற்றை நிறைவேற்றுவதற்கான தைரியம் பிறக்கின்றன. வீடு இல்லாத ஒருவர், குடிசைப்பகுதியில் இருக்கிறார். அவருக்குத் தரமான வீடு, கழிவறை, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, எரிவாயு இணைப்பு கிடைக்கும்போது, ஏழைகளின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கிறது. மாநிலத்தில் உள்ள இரட்டை இன்ஜின் அரசு, தற்போதைய நிலவரத்தை இரட்டைப் பலத்துடன் மேம்படுத்துகிறது என பிரதமர் வலியுறுத்தினார். ஏழைகளின் கவுரவம் மற்றும் முன்னேற்றம் பற்றி முந்தைய அரசுகள் கவலைப்படவில்லை எனவும், வாரிசு அரசியலின் மோசமானப் பாதிப்புகள் பல நல்ல விஷயங்கள் ஏழைகளைச் சென்றடைவதைத் தடுத்துவிட்டது என்றும் அவர் கவலைத் தெரிவித்தார்.
செயல்பாடுகளை அன்புடன் இணைக்க வேண்டும் என ராம் மனோகர் லோகியா கூறுவார் என பிரதமர் நினைவு கூர்ந்தார். ஆனால், முந்தைய ஆட்சியாளர்கள், ஏழைகளின் கஷ்டங்களை கண்டுகொள்ளவில்லை. முந்தை அரசுகள் ஊழல்கள் மற்றும் குற்றங்கள் புரிந்தன.
ஸ்வாமித்வா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இது எதிர்காலத்தில் உத்தரப் பிரதேசத்தின் ஊரகப் பகுதிகளில் செழிப்பிற்கான புதியக் கதவுகளைத் திறக்கவுள்ளது. பிரதமரின் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ், கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு ஆவண உரிமைகளை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. கழிவறைகள் மற்றும் உஜ்வாலா திட்டங்களால், நமது சகோதாரிகள் மற்றும் புதல்விகள் பாதுகாப்பாகவும், கவுரவத்துடனும் இருக்கின்றனர் என பிரதமர் கூறினார். பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில், பெரும்பாலான வீடுகள், பெண்களின் பெயரில் உள்ளன.
முந்தைய காலங்களில் உத்தரப் பிரதேசத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர், 2017ம் ஆண்டுக்கு முந்தைய அரசின் கொள்கை, மாஃபியா கும்பல் கொள்ளை அடிப்பதற்கான சுதந்திரத்தை அளித்தது. இன்று, முதல்வர் யோகியின் தலைமையின் கீழ், மாஃபியா கும்பல் ஓடி ஒளிந்து மன்னிப்புக் கோருகின்றனர் மற்றும் யோகியின் ஆட்சியின் கீழ் அவர்கள் கஷ்டப்படுகின்றனர் என பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டுக்கு அதிக அளவிலான பிரதமர்களைக் கொடுத்த மாநிலம் உத்தரப் பிரதேசம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இதுதான் உத்தரப் பிரதேசத்தின் சிறப்பு. ஆனாலும், ‘‘உத்தரப் பிரதேசத்தின் அடையாளத்தை இத்துடன் நிறுத்திவிட முடியாது. உத்தரப் பிரதேத்தை 6-7 தசாப்தங்களுக்குள் கட்டுப்படுத்த முடியாது. இதன் வரலாறு மற்றும் பங்களிப்பு காலவரையற்றது’’என பிரதமர் கூறினார். ராமர் அவதாரம் எடுத்த பூமி இது. கிருஷ்ணர் அவதாரமும் இங்குதான் தோன்றியது. 24 தீர்த்தங்கரர்களில் 18 ஜெயின் தீர்த்தங்கரர்கள் இங்குதான் தோன்றினர். மத்தியக் காலத்தில் சகாப்தங்களை உருவாக்கிய துளசிதாஸ் மற்றும் கபிர்தாஸ் போன்றோர் இந்த மண்ணில்தான் பிறந்தனர். சமூக சீர்த்திருத்தவாதிகள் சாந்த் ரவிதாஸ் போன்றோரின் பாக்கியம் பெற்ற மாநிலமும் இதுதான் என பிரதமர் கூறினார்.‘பவுத்த வட்டாரங்களில் சுற்றுலா - முன்னோக்கி செல்லும் வழி’ என்ற இரண்டு நாள் மாநாட்டை குஷிநகரில் சுற்றுலா அமைச்சர் தொடங்கி வைத்தார்
குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வை முன்னிட்டு, ‘பவுத்த வட்டாரங்களில் சுற்றுலா - முன்னோக்கி செல்லும் வழி’ என்ற மாநாட்டை இரண்டு நாள் மாநாட்டை சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்தது.
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி இதை தொடங்கி வைத்தார். மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, கலாச்சார இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி கே சிங், வெளியுறவு விவகாரங்கள் மற்றும் கலாச்சாரம் இணை அமைச்சர் திருமிகு மீனாட்சி லேகி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பேசிய திரு ஜி கிஷன் ரெட்டி, புத்த ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் ஒரு பகுதியாக குஷிநகர், ஸ்ரவஸ்தி மற்றும் கபிலவஸ்து ஆகியவற்றைச் சுற்றி உருவாக்கப்பட்ட பவுத்த சர்க்யூட் குறித்து எடுத்துரைத்தார். மத்தியப் பிரதேசம், பீகார், குஜராத் மற்றும் ஆந்திரா போன்ற நாட்டின் பிற பகுதிகளில் ஏற்கெனவே நிறைவு செய்யப்பட்டுள்ள பவுத்த சுற்றுலாத் திட்டங்கள் பற்றியும் அவர் பேசினார்.
திபெத்திய ஆய்வுகள், சாரநாத், மத்திய புத்த கல்வி நிறுவனம், லே, நவ நாளந்தா மகாவிஹாரா, நாளந்தா, இந்தியாவில் உள்ள பல்வேறு சிறப்பு நிறுவனங்களின் மூலம் புத்த மதத்தின் படிப்புகளை மேம்படுத்துவதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதைப் பற்றியும் அவர் பேசினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியால் எடுக்கப்பட்ட முயற்சிகளைப் பற்றி பேசிய அவர், “பெளத்த நாடுகளுடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்துவதை நமது பிரதமர் தமது தர்மமாக எடுத்துக்கொண்டார். குஷிநகர் சர்வதேச விமான நிலையம் புத்த மதத்தினரின் பயணத்தை எளிதாக்கும் மற்றொரு நடவடிக்கையாகும். உலகெங்கிலும் உள்ள துறவிகள் மற்றும் யாத்ரீகர்கள் புத்தருடன் தொடர்புடைய இந்த மதிப்புமிக்க இடத்தைப் பார்வையிட வருவார்கள்,” என்றார்.குஷிநகர் மகாபரிநிர்வாணா கோயிலில் அபிதாமா தின விழாவில் பிரதமர் கலந்து கொண்டார்
“புத்தரின் போதனைகள் ஒட்டு மொத்த உலகிற்கும் பொருந்தும், புத்தரின் தம்மா மனிதகுலத்திற்கானது”: பிரதமர்
"பகவான் புத்தரிடமிருந்து நாம் பெற்ற பொதுவான பாரம்பரியத்தை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், நம் நாடுகளிடையே வலுவான மற்றும் ஆழமான பிணைப்புகளை உருவாக்கவும் நாம் இன்று கூடியிருக்கிறோம்": திரு ஜி கிஷன் ரெட்டி
குஷிநகர் மகாபரிநிர்வாணா கோயிலில் பவுத்த அபிதம்மா தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார். சர்வதேச பவுத்தக் கூட்டமைப்பு மற்றும் உத்தரப் பிரதேச அரசுடன் இணைந்து, மத்திய கலாச்சார அமைச்சகம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
உத்தரப் பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், இலங்கை அமைச்சர் திரு நமல் ராஜபக்சே, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, கலாச்சாரம் இணை அமைச்சர்கள் திரு அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் திருமதி மீனாட்சி லேகி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இலங்கையைச் சேர்ந்த புத்தமதத் தூதுக்குழுவினர், மியான்மர்மியான்மர், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ், பூடான், தென்கொரியா, இலங்கை, மங்கோலியா, ஜப்பான், சிங்கப்பூர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் தூதர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அஸ்வின் மாத பவுர்ணமி புனித நாளில், புத்தபிரானின் புனித நூல் இங்கு கொண்டு வரப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். இலங்கையிலிருந்து வந்துள்ள தூதுக்குழுவினரை வரவேற்ற பிரதமர், இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகாலத் தொடர்புகளை நினைவு கூர்ந்ததுடன் அசோகச் சக்கரவர்த்தியின் புதல்வர் மகேந்திரனும், புதல்வி சங்கமித்திரையும் புத்தரின் போதனைகளை இலங்கையில் பரப்பியதையும் சுட்டிக்காட்டினார். இதே நாளில்தான் (அஸ்வின் பவுர்ணமி) இளவரசர் மகிந்தா இலங்கையிலிருந்து திரும்பி வந்து, அந்நாடு புத்தரின் போதனைகளை மிகுந்த உற்சாகத்துடன் ஏற்றுக் கொண்டச் செய்தியை தமது தந்தையிடம் தெரிவித்ததாக நம்பப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தச் செய்தி, புத்தரின் போதனைகள் ஒட்டுமொத்த உலகிற்குமானது புத்த தம்மம் மனிதகுலத்திற்கானது என்ற நம்பிக்கையை அதிகரித்ததாகவும் பிரதமர் கூறினார்.
புத்தபிரானின் போதனைகளை பரப்புவதில் சர்வதேச புத்தமத கூட்டமைப்பின் பங்களிப்பை பாராட்டிய பிரதமர், சர்வதேச புத்தமத கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் பொறுப்பு வகித்த திரு.சக்தி சின்ஹாவின் பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார். திரு.சின்ஹா அண்மையில் காலமானார்.
இன்றைய தினம், புத்தபிரான் துஷித சொர்க்கத்திலிருந்து பூமிக்கு திரும்பிய மற்றொரு புனித நாள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். எனவே அஸ்வின் பவுர்ணமி தினமான இன்று புத்த துறவிகள் தங்களது 3 மாத கால மழைக்கால தங்குமிடத்திலிருந்து வெளியே வருகின்றனர். அத்தகைய துறவிகளுக்கு கடைசி விடியலைத் தந்த பெருமிதத்தை இன்று தாமும் பெற்றுள்ளதாக திரு மோடி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய இலங்கை அமைச்சர் திரு நமல் ராஜபக்சே, இலங்கையிலிருந்து குஷிநகருக்கு தொடங்கப்பட்ட முதல் விமானத்தில் பயணம் செய்ததைப் பெருமையாகக் கருதுகிறேன் என்றும், இந்த மரியாதையை வாழ்நாள் முழுவதும் போற்றுவேன் என்றும் கூறினார். இலங்கைக்கு இந்தியாவிலிருந்து கிடைத்த மிகச் சிறந்த பரிசு புத்தமதம் என்றும் அவர் கூறினார்.
மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தமது உரையில், குஷிநகர் இப்போது விமானம், ரயில் மற்றும் சாலை ஆகிய மூன்று முறைகளாலும் இணைக்கப்பட்டுள்ளது என்றும் புத்தரின் பிறப்பிடமான லும்பினிக்குச் செல்வது தற்போது எளிதாகி உள்ளது என்றும் கூறினார். பல வருடங்களின் கோரிக்கை கடைசியாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தமது உரையில், “இலங்கையின் வஸ்கடுவா கோவிலின் தலைமைத் துறவி, இந்தியாவிற்கு நினைவுச்சின்னங்களைக் கொண்டு வந்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பகவான் புத்தரிடமிருந்து நாம் பெற்ற பொதுவான பாரம்பரியத்தைக் கொண்டாடுவதோடுமட்டுமல்லாமல், நம் நாடுகளிடையே வலுவான மற்றும் ஆழமான பிணைப்புகளை உருவாக்கவும் நாம் இன்று கூடியிருக்கிறோம்,” என்றார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியால் எடுக்கப்பட்ட முயற்சிகளைப் பற்றிப் பேசிய அவர், “பெளத்த நாடுகளுடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்துவதை நமது பிரதமர் தமது தர்மமாக எடுத்துக்கொண்டார். குஷிநகர் சர்வதேச விமான நிலையம் புத்த மதத்தினரின் பயணத்தை எளிதாக்கும் மற்றொரு நடவடிக்கையாகும். உலகெங்கிலும் உள்ள துறவிகள் மற்றும் யாத்ரீகர்கள் புத்தருடன் தொடர்புடைய இந்த மதிப்புமிக்க இடத்தைப் பார்வையிட வருவார்கள்,” என்றார்.
“21-ம் நூற்றாண்டில் தேசிய எல்லைகள், நம்பிக்கை அமைப்புகள், அரசியல் சித்தாந்தங்கள் உள்ளிட்டவற்றில் புரிதலையும் பொறுமையையும் ஊக்குவிக்க பகவான் புத்தர் பாலமாக விளங்கி நமக்கு ஞானத்தை வழங்குகிறார்,” என்று பிரதமர் முன்னர் கூறியதை அமைச்சர் குறிப்பிட்டார்.
கருத்துகள்