சேனல் நிறுவனங்கள் பிரதானச் சேனல்களை, தொகுப்பிலிருந்து வெளியேற்றுவதால், டிசம்பர் மாதம் முதல் கேபிள், 'டிவி' கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு

சேனல் நிறுவனங்கள் பிரதானச் சேனல்களை, தொகுப்பிலிருந்து வெளியேற்றுவதால், டிசம்பர் மாதம் முதல் கேபிள், 'டிவி' கட்டணம் உயர்த்தப்பட உள்ளதென, கேபிள் தொலைக்காட்சி ஆப்பரேட்டர்கள் கருத்து.


விரும்பிய சேனல்களுக்கு மாறும் முறை, 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அறிமுகமான புதிய நடைமுறையில், வாடிக்கையாளர்களே தாங்கள் விரும்பும் சேனல்களைத், தேர்வு செய்யலாம்.  சேனல் நிறுவனங்கள், தங்களின் அதிகபட்ச கட்டணத்தை, 19 ரூபாய் வரை நிர்ணயிக்க முடியும். திருத்தியமைக்கப்பட்ட கட்டணம், 2021 ஜனவரியில் வெளியிடப்பட்டதில், ஒரு சேனலின் அதிகபட்சக் கட்டணம், 19 ரூபாயிலிருந்து, 12 ரூபாயாகக் குறைக்கப்பட்டதனால், வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பிய சேனல்களைப் பார்க்க முடியும்


 திருத்தப்பட்ட கட்டணத்திற்கு, சேனல் நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட சேனல்கள் அடங்கிய தொகுப்பிற்கு, தனிக் கட்டணம் விதிக்கத் திட்டமிட்டுள்ளன. உதாரணமாக, 'டிஸ்னி ஹாட் ஸ்டாரில்' தொகுப்பு சேனல்கள்களின் கட்டணம், 49 ரூபாயாகும். இது, 69 ரூபாயாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

 ஒவ்வொரு நிறுவனங்களும் தொகுப்பு சேனல்களின் கட்டணத்தை உயர்த்த உள்ளன.பிரதானச் சேனல்களை தொகுப்பிலிருந்து மாற்ற உள்ளனர். அவ்வாறு மாற்றும்போது, அதற்கான கட்டணம் மாறும். இதனால், மாதக் கேபிள் கட்டணம், 30 முதல் 40 சதவீதம் வரை உயருமென கேபிள் தொலைக்காட்சி இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது, அரசு கேபிளுக்கான மாதக் கட்டணம், 130 ரூபாயுடன் ஜி.எஸ்.டி., சேர்த்து, 154 ரூபாயாக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா