உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் கூடுதல் நீதிபதிகளாக குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.

சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் நீதிபதிகள் நியமனம் இந்திய அரசமைப்பின் 217-ம் பிரிவின் (1) துணைப்பிரிவு மற்றும் 224-ம் பிரிவு தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, இந்தியாவின் தலைமை நீதிபதியுடனான ஆலோசனைக்கு பிறகு, பின்வரும் நீதி அலுவலர்கள்/வழக்கறிஞர்களை கீழ்காணும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள்/கூடுதல் நீதிபதிகளாக குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.


தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம்:

1. திருமதி பி ஸ்ரீசுதா

2. டாக்டர் (திருமதி) சி சுமலதா

3. டாக்டர் (திருமதி) ஜி ராதா ராணி

4. திரு எம் லக்ஷ்மன்

5. திரு என் துக்காராம்ஜி

6. திரு ஏ வெங்கடேஸ்வர ரெட்டி

7. திருமதி பி மாதவி ரெட்டி

8. திரு முருகங்கா சேகர் சாஹூ

ஒடிசா உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம்:

9. திரு ராதா கிருஷ்ண பட்நாயக்

10. திரு சசிகாந்த மிஷ்ரா 

கேரளா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம்:

12. திருமதி சோபி தாமஸ்

13. திரு புதென் வீடு கோபால பிள்ளை அஜித்குமார்

14. திருமதி சந்திரசேகரன் சுதா ஆகியோர்.

கவுகாத்தி உயர்நீதிமன்றத்தி நவற்கு நீதிபதிகள் நியமனம்

இந்திய அரசமைப்பின் 217-ம் பிரிவின் (1) துணைப்பிரிவு தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, இந்தியாவின் தலைமை நீதிபதியுடனான ஆலோசனைக்கு பிறகு, பின்வரும் கூடுதல் நீதிபதிகளை கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக 2021 அக்டோபர் 12 ஆம் தேதியிட்ட அறிவிப்பின் மூலம் குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.

1. சவுமித்ர சாய்கியா

2. பார்த்திவ்ஜோதி சாய்கியா

3. எஸ் ஹுகாடோ ஸ்வுவ் (2021 நவம்பர் 5-ல் இருந்து)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா