பிரதமர் அலுவலகம் ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மேன்மைமிகு ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் வாழ்த்து
ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மேன்மைமிகு ஃபுமியோ கிஷிடாவிடம் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், “மேன்மைமிகு ஃபுமியோ கிஷிடாவிடம் பேசி ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்றுள்ளதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். சிறப்புமிக்க இந்திய-ஜப்பன் சர்வதேச கூட்டை மேலும் வலுப்படுத்தவும், இந்திய-பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஆவலாக உள்ளேன்,” என்று கூறியுள்ளார்.
கருத்துகள்