புதுக்கோட்டையில் அனுமதியின்றிச் செயல்பட்ட நான்கு புகையிலை நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல்

புதுக்கோட்டையில் அனுமதியின்றிச் செயல்பட்ட நான்கு புகையிலை நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.


அரசு புகையிலை குட்கா பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்குத் தடை விதித்திருந்தும் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் காவல்துறையினர் ஆகியோர் சோதனை நடத்தி குட்கா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்கின்ற நிலையில், புதுக்கோட்டை நகர் பகுதியில் நான்கு தனியார் புகையிலை நிறுவனங்கள் செயல்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் புகையிலைப் பொருட்கள் தரமற்றதாக உள்ளதாகவும் நோய் பரப்பும் காரணமாக உள்ளதெனப் பல்வேறு புகார்கள் வந்த நிலையில்

தமிழக அரசு மற்றும் நீதிமன்றம் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களுக்குத் தடை விதித்துள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் புதுக்கோட்டையில்  கலைமான் நிஜாம் உள்ளிட்ட நான்கு புகையிலை நிறுவனங்களில்  அதிரடி சோதனை நடத்தினர் அவர்கள் உரிய அனுமதி இன்றியும் தரமற்ற புகையிலையை பயன்படுத்தித் தயாரிப்பதாகவும் தெரியவந்ததைத் தொடர்ந்து அந்த நான்கு நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்வாரத்தில், 40 மணி நேரம் சிகரெட் புகை உலவும் இடங்களில் இருப்பவர்கள் தொடர்ச்சியாக, ஐந்து ஆண்டுகள் அதே புகையில் இருந்தால், அவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது. புகை பிடிப்பதை விட்டுவிட புகையிலையை மெல்லும் பழக்கத்திற்கு போய் விடுகின்றனர். இது, அதைவிட ஆபத்து நிறைந்தது. ஏப்ரல், 7 உலக புகைக்காத தினமாகவும், மே, 31 உலக புகை மறுப்பு தினமாகவும் கடைபிடிக்கிறோம். புகை பிடித்தலின் தீமைகளும் அதை தவிர்க்கும் முறைகளும் நம் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இளைய தலைமுறையினருக்கு பல சந்தர்ப்பங்களில் நாம் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தவறிவிடுகிறோம். இனிமேலாவது பிறருக்கு இதன் தீமைகளை சொல்லும் கடமையை ஏற்படுத்திக் கொள்வோம்.

புகையிலையின் தீங்கு, பக்க விளைவுகளைக் கருதி விளம்பரங்கள் மற்றும் சந்தைபடுத்டுதலில் வழி பல்வேறு கட்டுப்படுகள் மற்றும் தடைகள் உலகம் முழுவதிலும் கடைபிடிக்கப் படுகிறது.

இந்தியாவில் புகையிலை வஸ்துகளின் அபாயம் பற்றிய படங்கள் இடம் பெற வேண்டும்.


பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தும் புகைபிடிக்கும் நபர்கள் தங்களை ஒரு அகத்தையுடன் மற்ற நபர்கள் முன் இந்த சட்ட விரோதமாக புகை பிடித்தல் தடுக்க நடவடிக்கை இல்லை அமெரிக்க குடியுரிமைப் போர்கள் நடக்கும் வரை தீயில் வாட்டப்பட்ட கரும்புகையிலைகளே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. 1812 ஆம் ஆண்டிற்குப் பின், மென்மையான, மிருதுவான, அதிக சுவை மணம் கொண்ட புகையிலை உற்பத்தி மற்றும் தேர்வை இன்றியமையாததாக இருந்தது.

அமெரிக்க விவசாயிகளின் பல்வேறு ஆராய்ச்சிகளினால் பல்வேறு உணர்த்தல் முறைகள் 1839 ஆம் ஆண்டு வரையிலும் முயற்சி செய்யப்பட்டன.

1839 ஆம் ஆண்டு வடக்கு கரோலினாவைச் சேர்ந்த மாலுமி அபிசா ஸ்லேடின் பணியாளரான ஸ்டீபன் பொலிவிலைப் புகையிலையை ஏதேச்சையாக கண்டறிந்தார். தீயிலுணர்த்த நிலக்கரியைப் பயன்படுத்தினார். இதனால் வெளிறிய மஞ்சள் (அ) தங்க நிறத்தில் புகையிலைகள் உலர்ந்து பெறப்பட்டன.நிகோட்டினாத் தாவரத்தின் ஆல்கலாய்டுகள் போதையை ஏற்படுத்தி அடிமையாக்க வல்லன.

மேலும் பூச்சிகளின் நரம்பு நச்சாகவும் செயல்படுகிறது.

புகையிலையின் உலர்ந்த நிலையில் 0.6% முதல் 3.0% நிக்கோடின் உள்ளது.

நிக்கோடின் அசிட்டைல் கொலைன் ரிசப்டார்களில் (nAChRs), அதன் இரு துணை மூலக்கூறுகளைத் (nAChRα9 and nAChRα10) தவிர நிகோட்டின் புகுவாய்களில் (ரிசப்டார்களில்) முதன்மை இயக்கியாக (அகோனிஸ்ட்) செயல்படுகிறது. இவைகளே மூளையுடன் தொடர்பு கொண்டு புகையிலை அடிமைத்தனத்திற்கு காரணமாகின்றன.

புகையிலையை நுகர்ந்தவுடன் அது நிக்கோட்டின் மூலக்கூறாக இரத்த ஓட்டத்தில் கலந்து 10-20 நொடிகளில் மூளையை அடைகிறது. இப்போதை சில நொடிகளே மதிமயக்கச் செய்து அதனை நுகரத் தூண்டுகிறது.

புகையிலை ஆண்டுக்கொருமுறை சாகுபடி செய்யப்படும் பூண்டுத்தாவரம் பணப்பயிராகும். சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்த நிக்கோடியானா பேரினத்தைக் கொண்ட இப்புகையிலையில் பல சிற்றினங்கள் உள்ளன.2003 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை பற்றிய தீங்கு, கட்டுபடுத்துவதன் முக்கியத்துவம், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்றவற்றிற்கான பரிந்துரைகளில் 168 நாடுகள் கையெழுத்திட்டன‌

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா