தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் பிரச்சார் பாரதியுடன் நவராத்திரியை கொண்டாடுங்கள்: சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி ஒளிபரப்புகள்
நவராத்திரி கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராவதால், பிரச்சார் பாரதியும், சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி ஒளிபரப்புகளை வழங்குகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தூர்தர்ஷனும், அகில இந்திய வானொலியும் பக்தி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.
நவராத்திரி காலம் முழுவதும், தூர்தர்ஷன் உங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து துர்கா பூஜை மற்றும் ஆரத்தி நிகழ்ச்சிகளை வழங்குகிறது. கொல்கத்தாவில் இருந்து ‘மகாளயா’, திருப்பதியிலிருந்து பிரம்மோற்சவம் போன்ற பிரபல நிகழ்வுகளும் இதில் அடங்கியுள்ளன.
அயோத்தியின் ராமலீலா நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பையும் தூர்தர்ஷனில் காண முடியும். அக்டோபர் 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை, தினந்தோறும் ராம்சரித்மனாஸின் இரண்டு பகுதிகள் டிடி நேஷனல் சேனலில் ஒலிபரப்பப்படும்.
அகில இந்திய வானொலியும், நாட்டின் பல இடங்களில் இருந்து நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது.
அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் அனைத்து ஆடியோ, வீடியோ நிகழ்ச்சிகளும் பிரச்சார் பாரதியின் நியூஸ் ஆன் ஏர் செயலில் பார்க்கலாம். பிரச்சார் பாரதியின் யூ டியூப் சேனல்களிலும் இந்த நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
கருத்துகள்