தொழில்களின் வளர்ச்சிக்கு வடகிழக்கு பகுதி சிறந்த வளங்களை கொண்டுள்ளது ஆயுஷ் அமைச்சர் கருத்து

ஆயுஷ் அடிப்படையிலான தொழில்களின் வளர்ச்சிக்கு வடகிழக்கு பகுதி சிறந்த வளங்களை கொண்டுள்ளது : திரு.சர்பானந்தா சோனோவால்


நாட்டின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சிக்கு மிகச்சிறந்த ஆற்றல் வடகிழக்கு பகுதியில் உள்ளது என ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் கூறினார்.

மேகாலயாவின் ரீ பாய் மாவட்டத்தில் உள்ள உமியாம் என்ற இடத்தில்  ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதியின் வடகிழக்கு மையத்தில், நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் கூறியதாவது:


இந்த பகுதியில் உள்ள தாவரங்களின் பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரிய மருந்துகளின் வளம், ஆகியவை ஆயுஷ் அடிப்படையிலான தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். வடகிழக்கு பகுதியின் பொருளாதாரத்தை அதிகரிக்க மத்திய அரசு உறுதியுடன் செயல்படுகிறது. இந்தியாவின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சியின் தளமாக வடகிழக்கு மாநிலங்கள் இருக்கும். இப்பகுதி மாணவர்களுக்கு தரமான கல்வி அவசியம். இந்தியாவின் வளர்ச்சி இயந்திரமாக வடகிழக்கு பகுதியை மாற்ற மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.

இவ்வாறு திரு சர்பானந்தா சோனோவால் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்