இந்தியா-இலங்கை ராணுவமிடையே ‘மித்ர சக்தி’ கூட்டு பயிற்சி தொடக்கம்

பாதுகாப்பு அமைச்சகம் இந்தியா-இலங்கை ராணுவமிடையே ‘மித்ர சக்தி’ கூட்டு பயிற்சி தொடக்கம்


இந்தியா-இலங்கை ராணுவம் இடையே 8வது ‘மித்ர சக்தி’ கூட்டு பயிற்சி இலங்கையின் அம்பாரா பகுதியில் தொடங்கியது. அக்டோபர் 4 முதல் 15ம் தேதி வரை இந்த கூட்டு பயிற்சி நடக்கிறது.
இந்திய ராணுவத்தின் காலாட் படைப்பிரிவில் இருந்து 120 வீரர்களும், இலங்கை ராணுவத்தின் இதே அளவிலான வீரர்களும் இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்கின்றனர். தீவிரவாத தடுப்பு பணி குறித்த பயிற்சியில், இரு நாட்டு ராணுவத்தினரும் ஈடுபடுவர்.

இந்த கூட்டு பயிற்சியை இந்தியா மற்றும் இலங்கை ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் பார்வையிடுவர். இந்த பயிற்சியின் மூலம் இருநாட்டு ராணுவங்களும் தங்களது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள முடியும். மேலும், இரு நாட்டு ராணுவத்தினர் இடையேயான ஒத்துழைப்பை மேப்படுத்துவதில் இந்த கூட்டு பயிற்சி முக்கியமானதாக இருக்கும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்