பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான குற்றம் சாட்டப்பட்டவகளுக்கு சலுகை காட்டிய ஏழு காவலர்கள் பணி நீக்கம்.

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு சலுகை காட்டிய ஏழு காவலர்கள் பணி நீக்கம்.


குற்றம்சாட்டப்பட்டவர்களை விதிமுறைகளை மீறி உறவினர்களைச் சந்திக்க அனுமதித்ததால் நடவடிக்கை பாய்ந்தன

ஏழு காவலர்களை பணிநீக்கம் செய்து சேலம் மாநகரில் காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோதா உத்தரவு                        பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில் சம்பந்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள்


வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரிராஜன் ஆகிய நபர்களை 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி கோயமுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு திரும்பும் வழியில் விதிமுறைகளை மீறி குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்க அனுமதித்த ஒழுங்கீன செயலுக்காக

1) ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம். 2) Gr I 1921 பிரபு. 3) Gr I 588 வேல்குமார். 4) PC 1961 ராஜ்குமார். 5) PC 2010 நடராஜன். 6)PC 2011 ராஜேஷ்குமார். 7) Gr I  993 கார்த்தி. ஆகியோரை சேலம் மாநகர காவல் ஆணையாளர்  நஜ்மல்  ஹோதா IPS பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா