விவசாயிகளின் போராட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வில் கார் நசுக்கியும், வன்முறையிலும் எட்டு விவசாயிகளும், ஒரு பத்திரிகையாளரும் உயிர் இழந்த நிலையில் .ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
துயரம் நிகழ்ந்த பகுதிக்குச் சென்று மக்களுக்கு ஆறுதல் சொல்வதென்பது அரசியல் கட்சித் தலைவர்களின் அடிப்படைக் உரிமையாகும். ஆனால், ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறைக்குக் கூட பயந்து காவல்துறையை ஏவி அர்சியல் கட்சித் தலைவர்களை முடக்கும் கோழைத்தனத்தை உத்திரப் பிரதேச அரசு செய்திருக்கிறதென அங்கு காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கின்றனர்.
போராடத்தை நடத்திய விவசாயிகளின் மீது வாகன விபத்தென திசை திருப்பி சத்தமில்லாமல் முடிக்க திட்டமிடும் உத்திரப் பிரதேச சம்பவம் தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுமையிலும் விவசாயிகளை களம் காண வைத்துவிட்டது! தமிழகத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி போராட்டங்களை வலுவாக முன்னெடுத்தது. லக்கிம்பூரில் காங்கிரஸ் கட்சியின் ராகுல், பிரியங்கா ஆகியோர் அஜய் மிஸ்ரா பதவி விலகக் கோரிக்கை வைத்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கார் மோதியதில் நான்கு விவசாயிகள் உள்பட எட்டு பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர்களான சரண்ஜித் சிங் சன்னி, புதன்கிழமை இரவு சந்தித்து ஆறுதல் தெரிவித்த நிலையில்
காவல்துறை உள்ளிட்ட பல்வேறு கெடுபிடி, 144 தடை உத்தரவு என பல்வேறுஈஒஒஒஒ மத்தியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் சிலரை ராகுல் தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துப் பேசியதற்கிடையே, லக்கிம்பூர் வன்முறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்கப் போவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் ஏழாம் தேதி தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோஹ்லி அடங்கிய அமர்வு இந்த விவகாரத்தை விசாரிக்குமென்று உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள வழக்குகள் விசாரணை பட்டியலிப்பட்டுள்ளது.
லக்கிம்பூர் வன்முறை - லட்சுமணபுரி அதாவது லக்ணௌ விமான நிலையத்தில் சத்தீஸ்கர் முதல்வர் தர்னா
முன்னதாக, நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, உத்தர பிரதேச மாநில துணை முதல்வர் ஆகியோரை கேரோ செய்வதற்காக விவசாயிகள் லக்கிம்பூர் கேரி பகுதியில் திரண்டு சாலையில் வழிமறித்து நின்றவர்கள் மீது பாஜக ஆதரவாளர்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் வாகனங்களை வேகமாக மோதிச் சென்றதாக கூறப்படும் காணொளி வைரலான நிலையில்.
லக்கிம்பூர் சம்பவத்தில் பலியானவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர்
சம்பவத்தில் நான்கு விவசாயிகள், நான்கு பொதுமக்கள் என எட்டு பேர் இறந்ததையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பார்க்க திங்கட்கிழமை அதிகாலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முற்பட்டபோது, அவரை லக்கிம்பூர் கேரியில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சீதாபூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி லக்கிம்பூர் செல்ல அனுமதிக்க மறுத்தனர்
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி லக்கிம்பூரில் கலவர சூழல் நிலவுவதாகக் கூறி பிரியங்கா காந்தியை சீதாபூரிலுள்ள பிஏசி அரசு விருந்தினர் இல்லத்தில் தடுத்து காவலில் வைத்தனர். வழக்கறிஞர்களைங் கூட சந்திக்க அனுமதிக்காத நிலையில், தன்னை காவல்துறையினர் சட்டவிரோதமாகக் கைது செய்து அடைத்து வைத்துள்ள பிரியங்கா காணொளியை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததனால், உத்தர பிரதேச அரசுக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது நிலையில், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் லக்கிம்பூர் செல்ல லக்னெள விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தபோது, அவரை காவல்துறையினர் அனுமதிக்காததனால் அவர் விமான நிலையத்திலேயே அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார்.
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும் லக்கிம்பூர் செல்ல முற்பட்ட போது, அவரையும் அதிகாரிகள் டெல்லியைத் தாண்டிச் செல்ல அனுமதிக்கவில்லை. ராகுல் காந்திக்கும் திங்கட்கிழமை அனுமதி மறுத்தது உத்தர பிரதேச உள்துறை. ஆனால், பிரியங்கா காந்தி காவல்துறை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு 38 மணி நேரத்துக்கும் மேலான நிலையில், லக்கிம்பூரில் கட்டுப்பாடுகள் தொடரும் ராகுல் காந்தி தலைமையில் ஐந்து பேர் கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று உத்தர பிரதேச உள்துறை தெரிவித்ததையடுத்து, டெல்லியில் புதன்கிழமை காலை லக்னெள விமான நிலையத்துக்குச் சென்ற ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் ஊடகப்பிரிவுத் தலைவர் ரந்தீப் சூர்ஜிவாலா, கே.சி. வேணுகோபால் ஆகியோர் சென்றனர். மறுபுறம் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெலும் லக்னெள விமான நிலையத்துக்கு வந்தனர்.
ஆனால், ராகுல் காந்தி காவல்துறை வாகனத்தில் மட்டுமே லக்கிம்பூருக்குச் செல்ல வேண்டும் இல்லை என்றால் அனுமதி இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்ததனால், விமான நிலைய வெளிப்புற நடைபாதையிலேயே அமர்ந்தபடி ராகுல் காந்தி தர்னாவில் ஈடுபட்டார்.
ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு ராகுல் காந்தி தம் சொந்த வாகனத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டதையடுத்து லக்னெள விமான நிலையத்திலிருந்து சீதாபூரில் தமது சகோதரியும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியை சந்திக்கப் புறப்பட்டு மாலை 5.45 மணியளவில் அவர் சீதாபூரை அடைந்தபோது அங்கு இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. அங்கு பிரியங்காவை சந்தித்து சில நிமிடங்கள் பேசிய ராகுல், பிறகு அவருடன் சேர்ந்து லக்கிம்பூருக்குப் புறப்பட்டார். வழிநெடுகிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், இரவு 7 மணியைக் கடந்து ராகுல் தலைமையில் சென்றவர்கள் லக்கிம்பூருக்குள் அனுமதிக்கப்பட்டனர். இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டு 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்த பகுதி முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. எல்லா வீதிகளிலும் காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தது, அங்கிருந்து பகிரப்பட்ட காணொளியொன்றின் மூலம் தெரிந்தது.
லக்கிம்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுள்ள பகுதிகளில் அனுமதிக்கப்படவில்லை. வெளியூரைச் சேர்ந்தவர்கள் அங்கு தங்கியிருக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்தப்பின்னணியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 10 பேர் உத்தர பிரதேச காவல்துரையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால், அவர்கள் விசாரிக்கப்படவோ கைது நடவடிக்கையோ மேற்கொள்ளப்படவில்லை.
உத்தர பிரதேச மாநிலம் லக்கம்பூரில் விவசாயிகள் உயிரிழப்புக்குக் காரணமான சம்பவத்தில் மத்தியிலும் உத்தர பிரதேசத்திலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆளும் அரசுகளைக் கண்டித்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் நடந்தபோது, மத்திய இணை அமைச்சரின் மகன் அங்குதான் காரிலிருந்தார் என விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், தமது மகன் அங்கு இல்லை என்பதை நிரூபிக்கும் காணொளி ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளதற்கிடையே அஜய் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்டவை குரல் கொடுக்கின்றன. அவர் ராஜிநாமா செய்ய வாய்ப்பில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியிருந்தாலும், கடந்த திங்கட்கிழமையிலிருந்து அஜய் மிஸ்ராவின் ராஜினாமாவை வலியுறுத்தும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் மோதிய புதிய வீடியோவை பா.ஜ., எம்.பி., வருண் காந்தி வெளியிட்டுள்ளார். விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுடைய கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகினர். பா.ஜ., எம்.பி.,யான வருண் காந்தி தெளிவான புதிய வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் பதிவிட்டதாவது: வீடியோ தெள்ளத் தெளிவாக உள்ளது. போராட்டக்காரர்களை கொலை செய்வதன் மூலம் அவர்களை அமைதியாக்க முடியாது. சிந்தப்பட்ட அப்பாவி விவசாயிகளின் ரத்தத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். வெளிப்பட்டுள்ள ஆணவம், கொடூரம் ஆகியவை விவசாயிகளின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குள் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.
லக்கிம்பூருக்கு செல்வதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட்டை மொரதாபாத் பகுதியில் காவல்துறையினர்
தடுத்துள்ளதாக தமது ட்விட்டர் வாயிலாகந் தெரிவித்துள்ளார். உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்தை பதவி விலகச் சொல்லி பாஜக தலைமை விரைவில் ஆணையிடும் என பலர் நம்புகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி-முதவ்வர் யோகி ஆதித்யா நாத் பனிப்போர் நவராத்திரி முதல் ஆரம்பமானதாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தற்போதுள்ள நிலையில் உத்திரப் பிரதேச மாநிலத்தின் அடுத்த சட்டமன்ற தேர்தல் நோக்கி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா வை முன்நிறுத்தி துவங்கிய நிலையில் பாஜக வின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வரும் வரை உபியில் அரசியல் பரபரப்பு அடங்காத நிலையில் தான் இருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
கருத்துகள்