ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இல்லாத வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட உள் ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து: சென்னை உயர்நீதிமன்ற அமர்வு

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு  இல்லாத மிகவும் பின் தங்கிய வகுப்பு


வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட உள் ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை தீர்ப்பு. முறையாக ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திய பின் தான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு விசாரித்த வழக்கில் தீர்ப்பு வெளியானது.     

                                    தமிழக அரசின் முடிவான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, 2020 பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி அன்று முதல்வராக இருந்த எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான தமிழக சட்டமன்றத்தில் சட்டம் அரசியல் காரணங்களுக்காக அவசரமாக நிறைவேற்றப்பட்ட நிலையில்,  திமுக அரசு பதவிக்கு வந்த பிறகு இது அரசாணையாகவே வெளியிடப்பட்டது இதை எதிர்த்து 76 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது           

பாமக வழக்கறிஞர் கே.பாலு இதைச் சிறப்பு வழக்காக எடுத்துக் கொள்ள முறையிட்ட நிலையில் தினந்தோறும் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு முன்னிலையில், விசாரணை நடைபெற்று வந்தது. வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று 76 மனுதாரர்கள் தினமும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வன்னியர்கள் இட ஒதுக்கீடு

செல்லுபடியாகும் என்று வாதிட்டோர் தரப்பில் பாமக  வழக்கறிஞர் கே. பாலு ஆஜரானார், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா, மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதா, என்பது போன்ற வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ள ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்வதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது வழக்கறிஞர் கே.பாலு இந்தத் தீர்ப்பை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்குமாறும் நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் நீதிபதிகள் முன்பாக கோரிக்கை வைத்தார். இட ஒதுக்கீட்டின் கீழ், மாணவ, மாணவிகள் ஒதுக்கீடுகளை பெற்று விட்டதாகவும் எனவே இப்போது இந்த தீர்ப்பு

கடைப்பிடிக்கப்பட்டால் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுமென்றும் கே‌பாலு வாதம் செய்தார்.  வாதத்தை மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.இந்த வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவின் போது 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் இட ஒதுக்கீடு, வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று தெளிவாகக் கூறியிருக்கிறோம். எனவே, இந்த தீர்ப்பை இப்போது நிறுத்தி வைப்பது மேலும் குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதை மற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் சமூக மக்கள் வரவேற்றுள்ளனர்.தற்போது தீர்ப்பு வெளியான நிலையில் பாமக நிறுவனர் சார்பில் இசுலாமியர் உள் இட ஒதுக்கீடு  அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு  தடைவிதிக்கப்படாத நிலையில் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் தடை விதித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதென -மருத்துவர்  ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார்.                        அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்  சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்.        அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் முரணான வன்னியர்களுக்கு வழங்கபட்ட 10.5 % தனி சாதிவாரி இட ஒதுக்கீட்டை ரத்து செய்து 
மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய தீர்ப்பினை அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்
உளமார வரவேற்கிறது.

முந்தைய அதிமுக அரசு  நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை மட்டும் மனதில் கொண்டு (26.2.2021) அன்று நடைபெற்ற சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்காமல் சட்டமன்றத்தில் விவாதிக்காமல்
அவசர அவசரமாக ஜாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல்
தன்னிச்சையாக சர்வாதிகார தனமாக  ஒரு சமூக மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற வேண்டும் என்பதை மனதில் வைத்து கொண்டுமிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள  20% இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5%, சீர்மரபினர்களுக்கு 7% இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% என்று அதிமுக அரசு அரசாணை வெளியிட்டது.

அதிமுக அரசின் மிக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உள்ஒதுக்கீடு  குறித்து அரசாணை 26/2 எதிராக தமிழகம் முழுவதும் ஏனைய பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடுமையான எதிர்ப்பையும் தங்களது கொந்தளிப்பையும் வெளிக்காட்டினர். தென் மாவட்டங்களில் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி கடுமையாக எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் 26/2 அரசாணை
வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.துரைசாமி, கே. முரளி சங்கர் அடங்கிய அமர்வு வழக்கின் தீவிர தன்மையை உணர்ந்து விசாரித்து வந்த நிலையில்  இன்று வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் 26/2 அரசாணை சட்டத்திற்கு முரணானது முறையான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் வழங்கியிருப்பது செல்லாது என்று கூறி சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் உளமார வாழ்த்தி வரவேற்கிறது.

சீர்மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் கருதி இன்று வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செல்லக்கூடாது என்று அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் தமிழக அரசிற்கு  கோரிக்கை வைக்கிறது.சீர்மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக சட்டம் போராட்டம் மேற்கொண்ட வழக்கறிஞர்கள் மற்றும்


ஒருங்கிணைப்புக்குழுவிற்கும்
தொடர்ச்சியாக போராட்ட களத்தில் நின்று போராடிய மக்களுக்கும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் நிர்வாகிகளுக்கும் நன்றி      கூறப்பட்டுள்ளது.உயர்நீதிமன்றம் எழுப்பிய ஏழு வினாக்கள
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. மனு நீதி வழுவா மனுநீதிச்சோழனின் சிலை அமைந்துள்ள நீதிமன்றம்  வன்னியர் உள் இட ஒதுக்கீடு செல்லாது எனத் தீர்ப்பு 

2018-ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தில் 102-ஆவது திருத்தமும், 2021-ஆம் ஆண்டில்  105-ஆவது திருத்தமும் செய்யப்பட்டதற்கு இடைப்பட்ட காலத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றும் அதிகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உண்டா என்பது குறித்து வினா எழுப்பியது

ஓர் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யாமல் அந்தச் சட்டத்தை திருத்த முடியுமா என்பதாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் அம்சங்களை, குறிப்பாக 338-பி பிரிவை புறக்கணித்து விட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது

சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது.
 பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வேலைவாய்ப்பு விகிதம், சமூக, கல்வி நிலைமை, மக்கள்தொகை  ஆகியவை குறித்து கணக்கிடக்கூடிய அளவுக்கு புள்ளிவிவரங்கள் இல்லாத சூழலில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா?
வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 16 ஆகிய பிரிவுகளை மீறியதா? என்றும்

எந்தவிதமான நோக்கக் காரணங்களும் இல்லாமல் மக்கள்தொகை குறித்த புள்ளிவிவரங்களின்  அடிப்படையில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மூன்று உட்பிரிவுகளாக பிரிக்க முடியுமா? என்பது

இந்த வினாக்களுக்கு இனி வரும் காலங்களில் உச்சநீதிமன்றத்தாலும், விடைகள் காணப்படும்  
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 16 ஆகிய பிரிவுகள் சம வாய்ப்பை வலியுறுத்தும் பிரிவுகள் ஆகும். ஒரே நிலையிலான வகுப்பினருக்கு, அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறதா  என்பது முக்கியம் இந்திய அரசியல் சட்டத்தின் 14, 15, 16 ஆகிய பிரிவுகளை வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் எந்த வகையில் மீறுகிறது? என்பது குறித்து  மேலும் உச்சநீதிமன்றம் வழங்கும் இறுதி உத்தரவு மட்டுமே இதற்கு இறுதியில் தீர்வாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா