12 உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்து உள்துறைச் செயலாளர் எஸ் கே பிரபாகர் உத்தரவு

தமிழகத்தின் ஊழல் தடுப்பு, கண்காணிப்புத்துறை ஐ.ஜி.வித்யா குல்கர்கி ஜபிஎஸ் . சிபிஐ இணை இயக்குநராக நியமனம்


செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 1998 ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான வித்யா குல்கர்னி 5 ஆண்டுகள் சிபிஐ இணை இயக்குநராகப் பணியாற்றுவார். மேலும் சிபிஜ இணை இயக்குநராக ஞான்ஷியாம் உபாத்யாய், நாவல் பஜாஜ் ஆகியோரும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் வித்யா குல்கர்னி சிபிஐ அயல்பணிக்கு சென்ற காரணத்தால் லஞ்ச ஒழிப்புத்துறைக்குக்கு புதிய இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார், கோயமுத்தூர் காவல் ஆணையர், மாவட்ட எஸ்பிக்கள் உட்பட 12 உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்த உத்தரவை உள்துறைச் செயலாளர் எஸ் கே பிரபாகர் பிறப்பித்துள்ளார்.  அதன் விவரம் வருமாறு


கோயமுத்தூர் காவல் ஆணையராக உள்ள தீபக் எம் தாமோர் இடமாற்றம் செய்யப்பட்டு இலஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்  திருச்சிராப்பள்ளி மாவட்ட எஸ்.பி,யான பா.மூர்த்தி சென்னை, சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி ஆகவும்.


போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை எஸ்.பி, சுஜித்குமார் திருச்சிராப்பள்ளி மாவட்ட எஸ்.பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் சென்னை புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ் கண்ணன் வேலூர் மாவட்ட எஸ்.பி-ஆகவும்


திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி, மணிவண்ணன் சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.


சென்னை நிர்வாக பிரிவு ஏஐஜி பி.சரவணன் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி ஆகவும் 


வேலூர் மாவட்ட எஸ்.பி, செல்வகுமார் சென்னை நிர்வாகப் பிரிவு ஏஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.அயல் பணியிலிருந்து திரும்பிய எஸ்.பி, ரம்யா பாரதி சென்னை சைபர் அரங்கம் எஸ்.பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இப் பதவி ஐஜி பதவியிலிருந்து எஸ்பி பதவிக்கு தரவிறக்கம் செய்யப்பட்டதுடன் இவர் கூடுதலாக செயலாக்கம் மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை பணிகளையும் கவனிப்பார்.  என உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா