52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் பேச்சு

இந்தியாவை உலக சினிமாவின் மையமாகவும், திரைப்படங்கள் மற்றும் விழாக்களுக்கான இடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்: 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் பேச்சு


இந்தியாவை உலக சினிமாவின் மையமாகவும்,  திரைப்படங்கள் மற்றும் விழாக்களுக்கான இடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என கோவாவில் இன்று தொடங்கிய 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர்  கூறினார்.

52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் இன்று தொடங்கியது. இதன் துவக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் கலந்து கொண்டு பேசியவதாவது:


இந்திய கதை, இந்தியர்களால் எழுதப்பட்டு விவரிக்கப்படுகின்றன. கூட்டு பன்முகத்தன்மையின்   இந்திய  ‘சினிமா கலைடாஸ்கோப்’-ல்  பங்கு பெற வேண்டும் என்பதுதான்,  அனைத்து சினிமா தயாரிப்பாளர்களுக்கும் நாங்கள் விடுக்கும் தகவல். இது வளர்ந்து வரும் கோடிக்கணக்கானோரின் குரலாக, புதிய முன்னேற்றங்களை எடுக்கவுள்ளது மற்றும் இந்த தசாப்தத்திலும் அதற்குப் பிறகும் வழிநடத்த தயாராகிறது.

திரைக்கதை உருவாக்கத்தின் மையமாக இந்தியாவை மாற்ற நாங்கள் எண்ணுகிறோம். இதற்காக பிராந்திய அளவில் திரைப்பட விழாக்களை அதிகரிக்க  திட்டமிட்டுள்ளோம்.


திரைப்பட தயாரிப்புக்கு பின் மேற்கொள்ள வேண்டிய பணிகள் நடக்கும் இடமாகவும் இந்தியாவை மாற்றுவதில்  நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்தியாவில் தொழில்நுட்ப திறமைசாலிகளை அதிகரித்து, உலக சினிமாவின் மையமாக இந்தியாவை மாற்ற திட்டமிட்டுள்ளோம். திரைப்படங்கள் மற்றும் விழாக்களின் மையமாக இந்தியாவை மாற்றவும் எண்ணியள்ளோம்.


உலகம் ஒரே குடும்பம் என்ற கருத்தை உடைய தேசத்திலிருந்து நாம் வந்திருக்கிறோம். என்ன மொழி பேசுகிறீர்கள், எந்த நாட்டிலிருந்து உங்கள் கதை வருகிறது மற்றும் உங்களின் நம்பிக்கை போன்றவை எல்லாம் முக்கியம் அல்ல. திரைப்படங்கள் நம் அனைவரையும் ஒன்றாக இணைக்கிறது.


சினிமா உலகளாவிய மொழியை பேசுவதால், பிறரை ஈர்க்கும் திறனில் திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக கருதப்படுகின்றன. ஒரு நாட்டின் கலாச்சாரம், கொள்கை மற்றும் சமூக விதிமுறைகள் ஆகியவற்றின் தாக்கம் திரைப்படங்களில் இருக்கும்.


திரைப்பட கலையின் சிறப்பை வெளிப்படுத்தவும், பல நாடுகளின் திரைப்பட கலாச்சாரங்களை சிறப்பாக புரிந்து கொண்டு அங்கீகரிக்கவும், உலக முழுவதம் நட்புறவையும், ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும்  உலக சினிமாக்களுக்கான ஒருங்கிணைந்த தளத்தை அளிக்க, இந்திய சர்வதேச திரைப்பட விழா எண்ணுகிறது.


இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான நமது அரசின் தொலை நோக்கு, ஒரு நிகழ்ச்சியோடு முடிவடையவில்லை, இந்தியா 100வது சுதந்திர ஆண்டை கொண்டாடும்போது, இந்திய சர்வதேச திரைப்பட விழா எப்படியிருக்க வேண்டும் என்பதை பற்றியும் நினைக்கிறேன்


திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் நாம் டிஜிட்டல் யுகத்துக்கு சென்றுள்ளதால், இதில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.


முதல் முறையாக, 52வது இந்திய சர்வதே திரைப்பட விழாவில் ஓடிடி தளங்களும் பங்குபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

சுதந்திர இந்தியாவின் வைரவிழாவை முன்னிட்டு, இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்க, வருங்கால 75 இளம் படைப்பாளிகளுக்கான போட்டி இந்த திரைப்பட விழாவில் நடத்தப்படுகிறது. இதற்காக நடுவர் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ள 75 இளம் படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்.


இந்த திரைப்பட விழாவில் பிரிக்ஸ் நாடுகளின் திரைப்பட விழாவும் முதல் முறையாக நடத்தப்படுகிறது. இதில் 5 நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பிரபல நடிகை ஹேமா மாலினிக்கு, இந்தாண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதை, மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் வழங்கினார். பிரபல பாடலாசிரியர் பிரசூன் ஜோஷிக்கு இந்த விருது 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளில் வழங்கப்படும். 

சர்வதேச சினிமாவில் சிறந்து விளங்கிய திரு ஸ்டீவன் சபோ மற்றும் மார்ட்டின் ஸ்கார்செசே ஆகியோருக்கு சத்யஜித்ரே வாழ்நாள் சாதனை விருதையும் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் வழங்கினார்.

இந்நிகழச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, கோவா முதல்வர் திரு. பிரமோத், சாவந்த், தகவல் ஒலிபரப்புத்துறை செயலர் அபூர்வா சந்த்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹாலிவுட் இயக்குநர் திரு மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது

கோவாவில் இன்று (2021 நவம்பர் 20) நடைபெற்ற 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹாலிவுட் இயக்குநர் திரு மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திரைத்துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பணிக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

காணொலி செய்தி மூலமாக ஏற்புரை நிகழ்த்திய சர்வதேச திரைப்பட ஆளுமையான திரு மார்ட்டின், “எக்காலத்திலும் சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான சத்யஜித் ரேயின் பெயரால் வழங்கப்படும் விருதைப் பெறுவதில் நான் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு முறையும் நான் அவருடைய திரைப்படங்களைப் பார்க்கும்போது, ​​அது ஒரு புதிய அனுபவமாக மாறும். பதேர் பாஞ்சாலியைப் பார்ப்பது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது, அது எனக்கு ஒரு புதிய உலகத்தைத் திறந்தது” என்றார்.

"நான் என் மகளுக்கு சிறு வயதிலேயே பதேர் பாஞ்சாலியைக் காட்டினேன். உலகத்தையும் உலகெங்கிலும் உள்ள பிற கலாச்சாரங்களையும் எப்படி அவள் உணர்கிறாள் என்பதில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது,” என்று திரு மார்ட்டின் கூறினார்.

விருதைப் பெற்றதற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், தனக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு இந்திய திரைப்படத் துறைக்கு நன்றி தெரிவித்தார்.

21-ம் நூற்றாண்டின் சிறந்த சினிமா சிந்தனையாளர்களில் ஒருவராக பலரால் கருதப்படும் திரு மார்ட்டின், ஒரு ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஆவார். குட்ஃபெல்லாஸ், டாக்ஸி டிரைவர், ரேஜிங் புல், தி டிபார்ட்டட், ஷட்டர் ஐலேண்ட் மற்றும் தி வேர்ல்ட் ஆஃப் தி வால் ஸ்ட்ரீட் போன்ற தலைசிறந்த படைப்புகளை அவர் உருவாக்கியுள்ளார்.

இன்று நடைபெற்ற 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹங்கேரிய திரைப்பட இயக்குநர் இஸ்டீவன் ஸாபோவுக்கும் சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நவீன சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் சத்யஜித் ரே, அவர் உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார்.52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹங்கேரிய இயக்குநர் திரு இஸ்த்வான் ஸாபோவிற்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது

சென்னையில் சத்யஜித் ரேவை சந்தித்ததை ஸாபோ நினைவு கூர்ந்தார்

கோவாவில் இன்று (2021 நவம்பர் 20) நடைபெற்ற 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹங்கேரிய இயக்குநர் திரு இஸ்த்வான் ஸாபோவிற்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திரைத்துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பணிக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

காணொலி செய்தி மூலமாக ஏற்புரை நிகழ்த்திய சர்வதேச திரைப்பட ஆளுமையான திரு இஸ்த்வான், “இந்தியர்களுக்கு எனது படங்கள் குறித்து தெரிந்திருப்பதும் அவர்களில் சிலர் அவற்றை விரும்புவதும் எனக்கு பெருமகிழ்ச்சியை தருகிறது,” என்றார்.

சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டதற்காக நன்றியை வெளிப்படுத்திய திரு இஸ்த்வான் சாபோ, பழம்பெரும் இயக்குநர் சத்யஜித் ரே உடனான தனது சந்திப்பு 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்ததை நினைவு கூர்ந்தார்.

"ரே என்னையும் என் மனைவியையும் இரவு உணவிற்கு அழைத்தார், அந்த சந்திப்பு சிறப்பாக இருந்தது. அவருடைய படங்கள், திரைப்பட தயாரிப்பு மற்றும் எங்கள் தொழிலைப் பற்றி அருமையான விவாதம் நடத்தினோம். அது ஒரு ஆழமான விவாதம், என்னால் அதை மறக்கவே முடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.

இன்று நடைபெற்ற 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹாலிவுட் இயக்குநர் திரு மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கும் சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நவீன சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் சத்யஜித் ரே, அவர் உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா