தொழிலதிபரைக் கடத்தி சொத்துக்கள் அபகரித்த காவல்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 6 காவலர்கள் பணியிடை நீக்கம்

தொழிலதிபரைக் கடத்தி சொத்துக்கள் அபகரித்த  காவல்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 6 காவலர்கள் பணியிடை நீக்கம்


2019 ஆம் ஆண்டு சென்னை முகப்பேர்  தொழிலதிபர் ராஜேஷ்  குடும்பத்தினரைக் கடத்தி செங்குன்றம் அருகிலுள்ள பண்ணை வீட்டில் அடைத்து வைத்து, சொத்துக்களை அபகரித்ததாக சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்யப்பட்ட நிலையில் பின்னர்


சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது, தொழிலதிபர் கடத்தி மற்றும் சொத்துக்களை அபகரித்த சம்பவத்தில் தொடர்பான திருமங்கலம் காவல்துறை உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், சார்பு ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட 3 காவலர்கள் மற்றும் ஆந்திர தொழிலதிபர் என போலியான நடித்த 10 நபர்கள் மீது சி.பி.சி.ஐ.டி. காவல்துறை விசாரணை செய்து வருகின்ற நிலையில் வழக்கில் தொடர்பான கோடம்பாக்கம் ஸ்ரீ யை ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி காவலர்களால் கைது செய்யப்பட்ட


நிலையில் குற்றச்சாட்டுக்காளான காவல்துறை அதிகாரிகள் உள்பட மீதமுள்ள ஒன்பது நபர்கள் தலைமறைவாகியுள்ளதால் சி.பி.சி.ஐ.டி. தனிப்படை காவல்துறையினர் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஆகஸ்டு மாதம் சிவகுமாருக்குச் சொந்தமான இடங்களில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சோதனை நடத்தி பல ஆவணங்களைக் கைப்பற்றினர்.  சென்னை முகலிவாக்கத்திலும் மற்றும் மதுரை உசிலம்பட்டியிலுள்ள அவரது வீடுகளில்  சோதனை நடத்தப்பட்டது.

ஆறு நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் மேலும் தலைமறைவாக உள்ள உதவி ஆணையர் சிவகுமார் உள்ளிட்ட ஆறு நபர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கும் படி சி.பி.சி.ஐ.டி. காவல்துறை ஆணையருக்குபீ பரிந்துரை செய்து அனுப்பியதன்டிப்படையில் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், சார்பு ஆய்வாளர் பாண்டியராஜன், காவலர்கள் கிரி, ஜோசப், ஜெயகுமார் உள்ளிட்ட ஆறு நபர்களைப் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசின் சார்பில் காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா