பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் 94 வது பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் 94 வது பிறந்தநாளை யொட்டி, டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பூங்கொத்து கொடுத்து தெரிவித்த பின்னர் கேக் வெட்டிய நிகழ்விலும் பங்கேற்றார்.


பிரதமர், ​​மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக வின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அனைவருமே உடனிருக்க எல்.கே.அத்வானி கேக் வெட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார், முன்னதாக, அத்வானிக்கு ட்வீட் மூலம் வாழ்த்து தெரிவித்த பிரதமர்.  தனது ட்விட்டர் பக்கத்தில், "மதிப்புள்ள அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன். மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும், நமது கலாச்சாரப் பெருமையை மேம்படுத்துவதற்காகவும் அவர் மேற்கொண்ட பல முயற்சிகளுக்காக தேசம் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது.

அவர் தனது அறிவார்ந்த நோக்கங்கள் மற்றும் புத்திசாலித்தனத்திற்காக பரவலாக மதிக்கப்படுகிறார்." என்று கூறியிருந்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அத்வானி, தனக்கு ஒரு உத்வேகம் மற்றும் வழிகாட்டி என்று கூறியுள்ளார்.  புலமை, தொலைநோக்கு மற்றும் புத்திசாலித்தனம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகவும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவராக அத்வானி கருதப்படுகிறார்


என்று  கூறினார். மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக வை  மக்களிடம் கொண்டு சென்று நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர் என்று

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பாராட்டினார். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துக் கூறிய ஜெ.பி. நட்டா, கோடிக்கணக்கான  கட்சித் தொண்டர்களுக்கு எல்.கே.அத்வானி உத்வேகமாக இருந்துள்ளார் என்க் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா