தேசிய கனிமவள வளர்ச்சி நிறுவனத்தின் அக்டோபர் மாத செயல்பாடு அமோகம்

தேசிய கனிமவள வளர்ச்சி நிறுவனத்தின் அக்டோபர் மாத செயல்பாடு அமோகம்


மத்திய எஃகு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கனிமவள வளர்ச்சி நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் 3.33 மில்லியன் டன் இரும்புத் தாதுவை உற்பத்தி செய்துள்ளது மற்றும் 3.58 மில்லியன் டன் இரும்புத் தாதுவை விற்பனை செய்துள்ளது.  உற்பத்தியில் 37 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. விற்பனை கடந்த ஆண்டு இதே காலத்தைவிட 42 சதவீதம் உயர்ந்துள்ளது.


2022-ஆம் நிதியாண்டில் அக்டோபர் வரையான மொத்த உற்பத்தி 21.04 மில்லியன் டன். மொத்த விற்பனை 22.08 மில்லியன் டன்.  உற்பத்தியில் இந்த நிறுவனம் கடந்த ஆண்டைவிட  43 சதவீதம் உயர்வைப் பெற்றுள்ளது.


தேசிய கனிம வளர்ச்சி நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டுக்காக அதன் குழுவினரை, என்எம்டிசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் திரு சுமித் தேவ் பாராட்டியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா