பாசிசத்திற்கும், கம்யூனிஸத்திற்கும் இடையில் நடக்கும் நவீன யுத்தத்தில் புரியாமல் சிக்கிய நடிகர் சூரியா.

பாசிசத்திற்கும், கம்யூனிஸத்திற்கும் இடையில் நடக்கும் நவீன யுத்தத்தில் புரியாமல் சிக்கிய நடிகர் சூரியா.


காரணம் நாம் முன்பே கூறியது போல ஒரு உண்மைச் சம்பவம் சார்ந்த கருத்து திரைக்கதையாக மாற்றம் பெறுவதற்கு முன்னர் கதையின் களம் அதன் கரு சம்பந்தப்பட்ட நபரான வழக்காடிய பார்வதியிடம் ஒப்புதல் பெறவேண்டும் அதை விடுத்து ஆதரவாக வாதாடிய பலரில் ஒருவரான ஓய்வு நீதிபதி மட்டுமே முன்னிறுத்தி அதன் காரணமாக மற்றவர்கள் மறைக்கப்பட்ட நிகழ்வுகள் இதனை கதை இலாகாவில்  அவர்கள் மட்டுமே செய்ய வில்லை , இதில் நடிகராக மட்டுமே சூரியாவின் பங்களிப்பும் இல்லை தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் வருகிறார், உண்மைச் சம்பவங்களின் பின்னணி எனக் கதைக் களம் நகரும் போது . நமது இதழ் முன்பே கூறியது போல உண்மையான அந்தோணிச் சாமியின் பாத்திரம் குருமூர்த்தி ஆனது கதைக்கான பார்வையா ? அல்லது அரசியலுக்கான பார்வையா ?  பாசிசம் கொண்ட  குருமூர்த்தி பாத்திரம் உண்மையான பாமக  குருவை அல்லது பாஜக கூறும் குருமூர்த்தி என்பதாவிலேயே துவங்கிய வினா விடை தெரியாத இருவரின் ஆதரவாளர்கள் களத்தில் வரக் காரணம். பெரியார் மடியில் தற்போது அமர்ந்து பயணிக்கும் நடிகர் சூர்யா தான். அது தவறில்லை

தற்போது கலைப் படைப்புகள் ஜாதி, மதம் கடந்து பாருங்கள் என் இயக்குனர் பாரதிராஜா கூறலாம் காரணம். இப்படி அக்காலத்தில் அலைகள் ஓய்வதில்லை , வேதம் புதிது, முதல் மரியாதை, என சமூகத்தில் புரட்சி செய்த இயக்குனர். அவர் பார்வையில் சரி இப்படி இப்போது ஒரு படம் வரமுடியாது. காரணம். இதன் துவக்கப்புள்ளி.  சண்டியர் என்று பின்னர் விருமாண்டியாக மாற்றம் பெற்றது ஜாதி அரசியல் தான் அப்போது நடிகர் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு வந்த போது விட்டு விட்டு விலகி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த சினிமா துறை சார்ந்த சங்கங்கள் தற்போது ஜெய்பீம் வரும்போது களம் காணும் நிலைக்கு முழுக்க காரணமாக நாம் பார்ப்பது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு நடந்த நிகழ்வுகளும் , பல மாற்றங்களுமே. அதுவே கம்யூனிஸத்திற்கும் பாசிசத்திற்கும் நடக்கும் மக்கள் அறியாத மறைமுக யுத்தம்.

இதில் நடிகர் சூரியா செய்த ஒரே தவறு நாம் முன்பே கூறிய குறவர் சமூக பார்வதி என்பவரின் இராயல்டி.பங்கு மட்டுமே.. இப்போது சமீபத்திய திரைப்படம் மண்டேலா என்பதும் ஜாதிவாரி சம்பந்தப்பட்ட கதைக் களம் கொண்ட படம் தானே ஏன் மக்கள் போராட்டம் செய்யவில்லை? அது கதை ஆனால் ஜெய் பீம் காதை என்பதாலா இல்லை ஜாதி வாரி மக்களின் தொகை குறைவாக இருந்தாலா என்பதே வினா. நடிகர் சூர்யாவிற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் அதிகரித்து வரும் சூழலில் கிறிஸ்தவ வன்னியர் மக்களிடம் இருந்தும்  எதிர்ப்புக் குரல் கிளம்பி இருப்பது,

அமைதியாக வாழும் தமிழர்கள் மத்தியில் உண்மைக் கதை என்று பொய் கதைகளை திணிப்பவர்கள் மீதான மக்களின் விழிப்புணர்வாகத்தான் இது பார்க்கப்படுகிறது. தற்போது 10.5 விழுக்காடு வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு அரசாணை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பை

 எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ளது பாமக. அவர்கள் ஜாதி சார்ந்த மக்களிடம் ஒரு எழுச்சி கொண்டு வரும் முயற்சியில் இருக்கும் போது நடிகர் சூர்யா வந்து சிக்கிய நிலையில் பல ஆதரவுடன் பல எதிர்ப்புக் குரல் வருவது இயல்பு.

தமிழ்நாட்டில்

ஒரு பக்கம் நடிகர் தயாரிப்பாளர் சூர்யாவிற்கு ஆதரவாக பாமகவிற்கு எதிராக அதிகம் பொங்குகிறவங்க எல்லாம் யாருன்னு பாருங்க 

இட ஒதுக்கீடு குறித்த திமுக அரசு அரசாணை வெளியிட்டப்பட்ட போது அதிமுக தேர்தல் அறிவிப்புக்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இட ஒதுக்கீடு மசோதா குறித்த அறிவிப்பை வெளியிட்ட போது அமைதியாக இருந்தவங்க தான். மற்ற இனங்கள் சார்ந்த மக்கள்.


இதில் வேடிக்கை என்னவென்றால் நரிக்குறவர்கள் அரை நாடோடிகள் (பார்வதி ராசாகண்ணு) இவர்கள் வேறு வகை சார்ந்த குறவர் இந்த நபர் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்கள் தான். இப்போது அவர்கள் வளர்ச்சிக்கு அரசாணை வருகிறது.

சமீபத்தில் மராட்டியத்தை  பூர்வமாகக் கொண்ட நாடோடி நரிக்குறவர் அசுவினியின் கோரிக்கையும் எங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்து அட்வணைப் பழங்குடியினராக அறிவியுங்கள் என்பது தான்.  திரைப்பட நடிகர் சூர்யாவுக்கு ஒன்பது கேள்விகள் கேட்டு  பாமக இளைஞரணித் தலைவர் முன்னால் அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு நடிகர் சூர்யாவும் பதில்  எழுதியிருந்தார். இந்தச் சூழ்நிலையில் நடிகர் சூர்யாவை முதலில் எட்டி உதைப்பவருக்கு ரூபாய். ஒரு இலட்சம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக சர்ச்சையான அறிவிப்பை வெளியிட்ட நிலையில் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோர் 24 மணி நேரத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்றும் வன்னியர் சங்கம் சார்பில் நடிகர் சூர்யாவுக்கு சட்ட அறிவிப்பு அதன் தலைவர் பு.தா.அருள்மொழி சார்பில் வழக்கறிஞர் கே.பாலுவால் அனுப்பப்பட்டது. நடிகர் சூர்யாவுக்கு எதிரான இந்த விஷயத்தில் திரையுலகம் அமைதியாக இருப்பதாக பலர் விமர்சித்த நிலையில்


தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபைத்  தலைவர் கட்ரகாட்டா பிரசாத், பாமக இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸுக்கு அனுப்பி வைத்த கடிதத்தில், “நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களால் காண்பிக்கப்பட்ட தங்கள் ஜாதி முத்திரையை நீங்கள் அடையாளப்படுத்தி அதை நீக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தீர்கள். எங்களுடைய தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபையில் உறுப்பினர் நடிகர் சூர்யா, உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்தக் காட்சியை உடனடியாக நீக்கிவிட்டார்.அந்த முத்திரையைப் படத்தில் பயன்படுத்தியதில் தயாரிப்பு நிறுவனத்துக்கோ படத்தின் கதாநாயகன் சூர்யாவுக்கோ எள்ளளவும் தொடர்பு இல்லாத நிலையில் உங்கள் கட்சியினர் நடிகர் சூர்யாவைத் தொடர்ந்து விமர்சித்து வருவது, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. அரசியல், ஜாதி, மத, இன, சார்பின்றி சமூக அக்கறையோடு ஈகைக் குணத்துடன் விளிம்பு நிலை மாணவர்கள் மீது விருட்சமான பார்வை கொண்டு கல்விப் பணியில் கலங்கரை விளக்காய் செயலாற்றி வரும் சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்கும்படி வருத்தத்துடன் வேண்டிக்கொள்கிறோம்” என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்த சமுதாய மக்களில் நடுநிலை மனதுள்ள சிலர் நம்மிடம் பேசுகையில்

"ஆனா,  அற்புதமான படம் தான் வேணும்னே வன்னியர் இனத்தை கொச்சைப்படுத்துற மாதிரி இயக்குநர் த.செ.ஞானவேல் காட்சி வச்சிருக்கிறது கண்டிக்கத்தக்கது. ( அதை மாற்றி விடுவதற்கு முன்னால்)ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த குடும்பம் காவல்துறையால் பாதிக்கப்பட்ட நிஜமா  நடந்த சம்பவத்தைத்தானே படமா எடுத்திருக்காங்க.. அதில கொடூர காவல் அதிகாரி வீட்டில, வன்னியர் சங்க அக்கினிச்சட்டி இருக்கிற நாள்காட்டி இருக்கு. ஆனா நிஜத்துல அந்தக் காவல் அதிகாரி, வன்னியரே இல்லே.படத்துக்கு வட்டார மொழி சொல்லிக்கொடுத்த எழுத்தாளர் குணசேகரன், ‘…இயக்குநர் த.செ.ஞானவேல் மனசாட்சியை முற்றும் அடகு வைத்துவிட்டு அப்படி ஒரு காட்சியை வைத்திருக்கிறார்" என்கிறார். அது சரிதான்.

சாதி வெறியுடன் நடந்த சம்பவத்தை அப்படியே படம்பிடிப்பதில் தவறில்லை. ஆனால் தொடர்பில்லாத விசயத்தில் எல்லாம் சாதி, வெறி என திணிப்பது மிகத்தவறு.  சாதி வெறி மாதிரி இது வியாபார வெறி.  சிறப்பான படத்தில் இப்படி தேவையற்ற முறையில் சாதியை புகுத்தியதால் ஒரு கருத்து இந்த வழக்கில் இருளர் இன குடும்பத்துக்கு நீதி கிடைக்கப் போராடிய  காம்ரேடு கோவிந்தராஜ் வன்னியர், அதே போல வழக்கறிஞர் கே.சந்துரு ஐயங்கார்.  இவர்கள் சாதி துறந்த மனிதர்கள். ஆனாலும் இதை எல்லாம் நம்மைச் சொல்ல வைத்துவிட்டார் இயக்குநர் த.செ.ஞானவேல். இந்நிலையில், பாஜக  தலைவர் ஹெச்.ராஜா ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறுகையில்,"ஜெய்பீம் படத்தில் உண்மை சம்பவம் என்று கூறுகிறார்கள் அந்தோணிசாமி என்ற பெயர் மட்டும் குரு மூர்த்தியாக மாற்றியிருக்கிறார்கள்.

அந்த இடத்தில் எந்த காலண்டரும் இருக்கக் கூடாது. காலண்டர் வைத்ததாக வேண்டுமென்றால் இயேசுநாதர் காலண்டரை வைக்கவேண்டும்.

மகாலட்சுமி காலண்டரை ஏன் வைத்தார்கள் இந்து மதம் என்றால் நக்கலாகப் போய்விட்டதா, அந்த மகாலட்சுமி காலண்டரை அப்புறப்படுத்த வேண்டும் இல்லை என்றால் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று எங்களுக்குத் தெரியும் எனக் கூறினார்.அரசியல்வாதிகள் நடிகர்களாக  மாறினால்.

நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறுவதற்கு அவர்களே பாதை அமைத்துக் கொடுப்பதாகவே அர்த்தம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா