சென்னை டி பி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை டி பி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.


களத்தில் நின்ற பணியாளர்களை வைத்து மீட்பு நடவடிக்கை செய்யாமல் அர்ப்பணிப்பு, பணி ஈடுபாடு காரணமாக களத்தில் இறங்கினார்.


காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி செய்த

அர்ப்பணிப்பு மிக்க சேவையால் மக்கள் உள்ளங்களைக் கவர்ந்தார் 


சென்னையில் கொட்டியது  மழை காவல்துறையினர், சென்னை மாநகராட்சிப் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மழையில் நனைந்து, உடல் நலம் குன்றிய உதயா என்ற நபர் உயிருக்கு போராட


அவரை  டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி,தோளில் தூக்கி ஓடி ஆட்டோவில் ஏற்றி, மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தார்.


மீட்புப் பணி நடக்கும் இடத்தில் சில பணியாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை வைத்து பணி செய்திருக்கலாம். ஆனால், அர்ப்பணிப்பு, பணி ஈடுபாடு காரணமாக அவரே மீட்பு நடவடிக்கை செய்தார். ராஜேஸ்வரியின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

மேலும், மற்ற இடங்களில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்போருக்கும் ஒரு உத்வேகத்தையும் அளித்தது. நேற்று தமிழகத்தின்  முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் ராஜேஸ்வரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்ததுடன், சான்றிதழ் வழங்கிக் கௌரவித்தார்.
கடமை ஈடுபாட்டோடு பணி செய்தால் எவ்வளவு பெருமை?

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நேரில் அழைத்துப் பாராட்டினார்

அவரது செயல் இந்திய அளவில் பேசப்படுகிறது. மனித நேயம் இல்லாமல் இருக்கும் பல காவலர்கள் மத்தியில் இவர் மனித நேயம் கொண்டு செய்த செயல் என்பது இருண்ட பகுதியின் விளக்கு போல ஜொலிக்கும் காரணமாக இருக்கலாம் பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வாழ்த்துக்கள் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா