குறைவான வட்டி விகிதத்தில் மீனவர்களுக்கு கடன்: மத்திய இணையமைச்சர் தகவல்

குறைவான வட்டி விகிதத்தில் மீனவர்களுக்கு கடன்: மத்திய இணையமைச்சர் எல். முருகன் தகவல்


கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் குறைவான வட்டி விகிதத்தில் மீனவர்களுக்கு கடன் வழங்கப்படும் என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.


கொச்சி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய இணையமைச்சர் எல் முருகன், இன்று மாலை முணம்பம் பகுதி மீனவ மக்கள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது இணையமைச்சர் பேசுகையில், கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் குறைவான வட்டி விகிதத்தில் மீனவர்களுக்கு கடன் வழங்கப்படும், என்றார். மேலும், பள்ளி, சுகாதார வசதிகள் ஆகியவற்றுடன் கூடிய மீனவ கிராமங்களை 7.5 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு அமைக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மீனவர்களுக்கென தனி துறை அமைத்தது, மீனவர்கள் நலனில் மத்திய அரசின் அக்கறையைக் காட்டுகிறது.


தற்சார்பு இந்தியா திட்டத்தின்படி 20,000 கோடி ரூபாய் மீன்வளத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்தாlர்.


தொடர்ந்து முணம்பம் மீன்பிடித் துறைமுகத்தை, மத்திய இணையமைச்சர்  பார்வையிட்டார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா