புதுச்சேரியில் சக்தி டேட்டா கேபிள்ஸ் நிறுவனத் தரச் சான்றிதழ் வாபஸ்

தரச் சான்றிதழ் வாபஸ்


மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தரச் சான்றிதழ் அமைப்பான இந்திய தர நிர்ணய அலுவலகம் (பிஐஎஸ்). பொருட்களின் தரத்தை நிர்ணயித்து சான்றிதழ் வழங்கி வருகிறது. இந்த அமைப்பு அண்மையில் மேற்கொண்ட கண்காணிப்பு மற்றும் சோதனையில், புதுச்சேரியில் சக்தி டேட்டா கேபிள்ஸ் நிறுவனம் தயாரித்த குறிப்பிட்ட பேட்ச் ரகம் உரிய அங்கீகாரத்துக்கு ஏற்ற தரத்தில் இல்லை என்பது தெரிய வந்தது.


இதனை விற்பனைக்கு விடுவது, நுகர்வோர் மற்றும் விற்பனையாளருக்கு அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால் அந்த குறிப்பிட்ட பேட்ச் ரகத்தை (3 கோர் x 0.75 ச.மி.மீ பிவிசி இன்சுலேடட் & சீத்டு ஃபிளெக்ஸிபிள் கேபிள் காப்பர் கண்டக்டர், கிளாஸ் 5, டைப் டி, சீத் எஸ்டி3 1100 வி, பேட்ச் நம்பர் பி751903யு, பிராண்ட் எஸ்டிசி) திரும்பப் பெற அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் கூடுதல் விவரங்கள்/ விளக்கங்களுக்கு திரு ஜோஸ் சார்லஸ், விஞ்ஞானி- டி-யை 9567643978 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு, மார்க்கெட்டிங் & நுகர்வோர் நல துணை இயக்குனர் எச். அஜய் கன்னா வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா