ஆச்சாரியா கிருபாளினி மற்றும். மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தில், பிரதமர் புகழாரம்

ஆச்சாரியா கிருபாளினி பிறந்த நாளில் பிரதமர் அவரை நினைவு கூர்ந்தார்


இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஆச்சாரியா கிருபளானி ஆற்றிய பங்களிப்பிற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார். ஆச்சாரியா கிருபாளினியின் பிறந்த நாளான இன்று, நமது தேசத்திற்கான அவரது சிறந்த தொலைநோக்குப் பார்வை, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக அதிகாரம் ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக பிரதமர் அவரைப் புகழ்ந்துரைந்தார்.


சுட்டுரை வாயிலாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

“காந்தியடிகளின் தலைமையிலான இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர் ஆச்சாரியா கிருபாளினி. அவர் நமது தேசத்தின் மீது சிறந்த தொலைநோக்கு பார்வையைக் கொண்டிருந்தார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக,  அதை நிறைவேற்றுவதற்காகப் பாடுபட்டார். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், சமூக அதிகாரமளித்தலுக்கும் அவர் மகத்தான பங்களிப்பைச் செய்தார். அவரது பிறந்த நாளான இன்று அன்னாரை நினைவு கூர்கிறேன்”.                           மற்றும் மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தில் பிரதமர் அவருக்கு புகழாரம்


மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.  அவர் முன்னோடி சிந்தனையாளர் எனவும், அறிவுஜீவி எனவும் பிரதமர் கூறினார். சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்கு ஊக்கமளிப்பதாக உள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இது குறித்து சுட்டுரையில், பிரதமர் கூறியிருப்பதாவது:


”மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தில், அவருக்கு புகழாரம் சூட்டுகிறேன். அவர் முன்னோடி சிந்தனையாளர் மற்றும் அறிவுஜீவி. சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. கல்வித்துறையில் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சமூகத்தில் சகோதரத்துவத்தை மேம்படுத்த அவர் பணியாற்றினார்”.எனவும் குறிப்பிட்டுள்ளார் மேலும் மற்றொரு தகவல் படி ஒனகே ஒபவ்வாவின் பிறந்த நாளில் பிரதமர் அவருக்கு புகழஞ்சலி

கன்னடப் போராளியான ஒனகே ஒபவ்வாவின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்வை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு சிரம் தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்தார். ஒனகே ஒபவ்வா ‘நமது பெண் சக்தி’யின் அடையாளமாக நம்மை ஊக்குவிக்கிறார்’ என்று திரு மோடி கூறினார்.

சுட்டுரை வாயிலாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

“துணிச்சலான ஒனகே ஒபவ்வாவின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்வை முன்னிட்டு அவரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். தம் மக்களையும், கலாச்சாரத்தையும் காக்க அவர் துணிச்சலுடன் போராடியதை யாராலும் மறக்க முடியாது.  நமது பெண் சக்தியின் அடையாளமாக அவர் நம்மை ஊக்குவிக்கிறார்.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா