உக்கடம் சின்மயா வித்தியாலயா பள்ளி மாணவி ஆசிரியர் பாலியல் கொடுமையால் தற்கொலை

பாலியல் கொடுமையால் கோயமுத்தூர் மாணவி தற்கொலை மனது கனக்கச்செய்கிற செயல் குற்றவாளி ஆசிரியர். குற்றத்திற்கு துணைபோன பள்ளி நிர்வாகம்.  எவ்வளவு கொடுமை!


ஒரு மாணவி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார் செய்த பின் எப்படி அந்தப் பள்ளி நிர்வாகம் அதைக் கடந்துபோனதோ? கோயமுத்தூர் மாவட்டம், உக்கடம் பகுதியில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவி, சென்ற வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலையான சம்பவத்தில் பள்ளி இயற்பியல் ஆசிரியரான மிதுன் சக்கரவர்த்தி நேற்றுத்தான் கைது செய்யப்பட்டுள்ளார்.

 மாணவியின் பெற்றோர் புகார் மீது விசாரணை செய்த உக்கடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சம்பந்தப்பட்ட குற்றவாளியான இயற்பியலாசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்ற நபர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், போக்சோ சட்டத்தின் இரு பிரிவுகள் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில்  விசாரணை முடிவில் இரவு  கைதானவரை கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்குப் பின் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி உடுமலைப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட. நிலையில்  உரிய நடவடிக்கை எடுக்கு வேண்டி நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளுடன் பெற்றோரும் உறவினர்கள் மாணவியின் வீட்டின் முன்புறம் போராட்டத்தில் ஈடுபட்டு பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காதவரை மாணவியின் பிரேதப் பரிசோதனை செய்த உடலை வாங்க மறுத்து  'ஜஸ்டிஸ் ஃபார் பொன் தாரணி' என்ற கோசத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இவ் வழக்கில் இன்னும் பலரைக் கைது செய்யப்பட வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


பள்ளி மாணவியின் தற்கொலை சம்பவத்தில் சின்மயா பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவானவரைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் கர்நாடக மாநிலத்தின் பெங்களுர் நகரில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து பெங்களூருவிலிருந்து கோயமுததூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு  கொண்டு வரப்படுகிறார்

இந்த பாலியல் கொடுமையானது ஏதோ ஒரு பள்ளியில்,ஒரு மாணவிக்கு நேர்ந்த சாதரணக் குற்றமல்ல மிகவும் கொடூரமான செயல்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பான விளக்கப் படங்கள் ஒவ்வொரு பாடக்குறிப்பேட்டின் அட்டைகளிலும் அச்சிடப்பட்டுள்ளது. அதன் விளக்கத்தை ஒவ்வொரு ஆசிரியரும் குழந்தைகளிடம் கூறுகிறார்கள்.


இதற்கென தனி பாடவேளை எடுத்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி. எல்லா பள்ளிகளிலும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு  கற்பிக்க. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்று குழந்தைகள் கற்றுக்கொள்ள ஏதுவாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அரசால் வழங்கப்படும் நிலையில்

எத்தகைய சூழல்களில் குழந்தைகள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை கூறி, அவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் தைரியமாக கூறலாம் என்றும் அறிவுறுத்தப்படவும் இம்மாதிரியான நிகழ்வுகளில் குழந்தைகள் மீது எந்த தவறும் இல்லை , அவர்கள் எதற்காகவும், யாருக்காகவும் பயப்படத் தேவையில்லை என்பதை தெளிவாக விளக்கம் தந்து பல பள்ளிகளில் நடந்த போதும் 


 இதையெல்லாம் தாண்டி குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான பாலியல் வன்கொடுமைகள் நடப்பதுதான் வேதனை. எதிர்வரும் காலங்களில் மாநில அரசுகளுடன்; மத்தியில் உள்ள அரசு  கலந்தாய்வு செய்து; இன்னும்கடுமையான சட்டங்கள் இயற்ற முன்வர வேண்டும். இது தொடர்பான விசாரணைகளைளை துரிதப்படுத்தி குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்வதிலும் வேகம் காட்டி நீதிமன்றம் மூலம் தக்க தண்டனை பெற்றுத் தருவது காலத்தின்  மிகவும் அவசியமாகும்.  உலகெங்கும் சிறார்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான அநீதியை முற்றாய் வென்றெடுக்க இப்போதும் போராடிக் கொண்டிருப்பதை விட வேறு அவமானம் இல்லை என்பதே உண்மை 

சம்பந்தப்பட்ட பள்ளியின் நிர்வாகம் "பேருந்தில் யாரோ ஒருவர் இடித்துவிட்டது போல் நினைத்துக்கொள்" என்று கடந்த போது எப்படி துடித்துப் போயிருக்கும்?இனி இந்த வாழ்வே வேண்டாம் என்று ஒரு இளம்பெண் முடிவுக்கு வரும்போது மரணம் அந்த பெண்ணுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும், அரசு அமைப்புகளுக்கும் கூட நிகழ்கிறது. 

நாம் இத்தனை பேர் இன்று ஆதங்கம் தெரிவித்திருந்தும் அந்தப் பெண் குழந்தை தனக்கு இழைக்கபப்ட்ட பாலியல் கொடுமைகளுக்கெதிராக தனியே போராடி தோல்வியால் இறுதியாக மரணத்தை தேர்ந்தெடுத்தது.எவ்வளவு பெரிய கொடுமை,வலி,வேதனை! 

இன்னும் எவ்வளவு காலம் கல்விக்கூடங்களை இப்படி பாதுகாப்பற்ற இடங்களாக வைத்துக்கொண்டிருக்க இயலும். பத்மா சேஷாத்ரி, மற்றும் சின்மயா வித்தியாலயா  

இப்படி  பள்ளியில் நடக்கும் பாலியல் கொடுமைகளை வெளியில்,வீட்டில் சொல்லமுடியவில்லை? ஏன் பாலியல் குற்றவாளிகள் அச்சமற்று திரியும் வீதிகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளைப் போல் நடத்தப்படுகின்றனர்? ஏன் அவர்களுக்கு யாருமில்லை? சட்டம்,நீதி அவர்கள் வாழும்போது ஏன் வரவில்லை? 

இப்படி எத்தனையோ தீராத கேள்விகள் உள்ளன. வெறும் சட்டமும்,தண்டனையும் மட்டும் இந்த கொடுமையான குற்றங்களை தடுத்துவிடாது. அவற்றோடு வலுவான உளவியல் ஆதரவும், ஆழமான பாலியல் கல்வியும் தேவை. என் பலரும் குரல் கொடுக்க  

கல்விக்கூடங்களில் இம்மாதிரியான பாலியல் குற்றங்கள்,பாலின ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும் சுதந்திரமான, கனிவுமிகுந்த, அதிகாரம் மிக்க அமைப்புகளை ஜனநாயக சக்திகளான நாம் தான் உருவாக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட மாணவ,மாணவியர் அச்சமற்று அந்த அமைப்புகளை அணுகும் சூழல் உருவாக்கப்படவேண்டும். 

உளவியல்,சட்ட உதவிகள் வழங்கப்படவேண்டும். இப்படிப்பட்ட சுதந்திரமான அமைப்புகள் இல்லாத கல்வி நிறுவனங்களுக்கு அரசும் அனுமதி வழங்கக்கூடாது. அவை தொடர்ந்து இயங்குவதையும் உறுதிசெய்ய வேண்டும். உண்மையான கல்விக்கு அடிப்படையான தேவை கண்ணியமும், பாதுகாப்புமான சூழலுமே என்பதை நமது மக்கள் சார்ந்த அரசு அந்த மோசடியான பள்ளிகளின் நிர்வாகம் குறித்துப் புரிந்துகொள்ள

வேண்டும் என்பதே தற்போது உள்ள நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா