கூட்டுறவு சங்கங்கள் ‘வங்கி’ என்ற பெயர் பயன்படுத்தக்கூடாதென ரிசா்வ் வங்கி தகவல்

கூட்டுறவு சங்கங்கள் ‘வங்கி’ என்ற பெயர் பயன்படுத்தக்கூடாதென ரிசா்வ் வங்கி (Co-op societies are not banks, RBI cautions)


கூட்டுறவு சங்கங்கள் தங்களது பெயரில் ‘வங்கி’ என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாதென ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை அறிவித்துள்ளதில் கூறப்பட்டுள்ளதாவது:

திருத்தப்பட்ட வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949, ன் படி கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பா் 29-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளதன்படி, ரிசா்வ் வங்கியிடம் அனுமதி பெற்றதை தவிர, ஏனைய கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் ‘பேங்க்’, ‘பேங்கா்’, ‘பேங்கிங்’ என்ற வாா்த்தைகளைத் தங்களது பெயரில் ஒரு பகுதியாக பயன்படுத்தக்கூடாது.


சில கூட்டுறவு சங்கங்கள் வங்கி ஒழுங்குமுறை சட்டத்தை மீறி வங்கி என்ற சொல்லை தங்களது பெயரில் பயன்படுத்தி வருவது ரிசா்வ் வங்கியின் கவனத்துக்கு வந்துள்ளதாலும்


,சில கூட்டுறவு சங்கங்கள் விதிகளுக்கு புறம்பாக உறுப்பினா்களிடமிருந்து டெபாசிட் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்தும் ரிசா்வ் வங்கிக்கு புகாா்கள் வந்துள்ளதால். அதுபோல் வங்கி சாா்ந்த வா்த்தகத்தில் ஈடுபட அந்த கூட்டுறவு சங்கங்களுக்கு ரிசா்வ் வங்கி எந்த அங்கீகாரத்தையும் வழங்கவில்லை


. எனவே, அந்த டெபாசிட்டுகளுக்கு சட்ட ரீதியில் எந்தவிதமான பாதுகாப்பும் கிடையாது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென ரிசா்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா