பல இடங்களில் கனமழை தொடர்கிறது மிதக்கும் சென்னை

சென்னையில் பல இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, சேலம் தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூரில் கனமழை பெய்யுமென அறிவிக்கப்பட்டது பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவுள் தெரிவித்த நிலையில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி, சென்னையில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு நவம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் ஆழ்கடல் சென்ற மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களுக்குத் தென்மேற்கு வங்கக்கடல் ஆந்திராவின் கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக வீடுகளில் மழைநீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதிப்பட்ட நிலையில் .தண்ணீர் தேங்கியதால் சென்னையில் உள்ள ஆறு சுரங்கப்பாதைகளும்  மூடப்பட்டது. ஈவிஆர் சாலை , துரைசாமி சுரங்கப்பாதை, வியாசர்பாடி , மேட்லி சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துக் காவல்துறை  தெரிவித்தது. 

வில்லிவாக்கம் சுரங்கப்பாதையில் இலகுரக இருசக்கர வாகனங்கள் செல்லத் தடை செய்யப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்து கொள்ளலாமெனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர் மழை  கண்காணிப்பு அதிகாரிகள் 15 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே  மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்தது. வேளச்சேரி ராம்நகர் பகுதியில் மழைநீர் தேங்கியது. மெரினா கடற்கரைச் சாலை, பாண்டி பஜார் சாலை, தி.நகர் விஜயராகவன் சாலையில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீரில் சிக்கியவர்களைத் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பொதுமக்களைப் படகில் மீட்டனர். தணிகாசலம் சாலை மழைநீர் தேங்கியது. மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்திலிருந்த மரம் சாய்ந்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலை பெரியார் சாலை, மூர் மார்க்கெட் அருகே பிராட்வே குரலகம் அருகே ராயப்பேட்டை நெடுஞ்சாலை, எழும்பூர் வரதராஜாபுரத்தில் உள்ள சின்ன குழந்தை தெருவில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. எழும்பூர் கெங்கி ரெட்டி பாலத்தில் தேங்கிய மழை நீரில்  இளைஞர் ஒருவர் குளித்தார். வியாசர்பாடி ஜீவா ரயில்நிலைய பாலத்தின் கீழ்வந்த பெண்மணி பள்ளத்தில் தவறி விழுந்தார். வியாசர்பாடி கல்யாணபுரம் சென்னை மாநகராட்சி பள்ளியில் மழை நீர் புகுந்தது. இப்படி மீண்டும் மழைநீரில் மிதக்கும் நிலை வர கடந்த ஆட்சியில் செய்த ஊழல் வெளிவருகிறது .


ஆனால் இன்னும் சரியான நடவடிக்கை தான் வரவில்லை.சென்னை உள்ளிட்ட காஞ்சிபுரம்.திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மழையையும் வெள்ளத்தையும்  எதிர்கொள்ள ஒட்டு மொத்த அரசு நிர்வாகமும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில். சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று தமிழகத்தின் முதல்வர் பார்வையிட்டார்.


பொதுமக்கள் அவசர உதவி 1070 என்ற இலவச எண்ணில் தொடர்புகொண்டு குறைகளைத் தெரிவிக்கும் படி தகவல்
2015 ஆம் ஆண்டில் பெரிய வெள்ளம், மற்றும் கொரோனா பரவல் பேரிடர் என தமிழக மக்கள் பாதிக்கப்படும் போது, தோள் கொடுக்க உங்கள் உடன்பிறப்பு தயாராக அழைப்பு விடுத்தார்.


மேலும் திமுக  நாடாளுமன்ற, சட்டமன்ற, உறுப்பினர்கள்,  உள்ளாட்சிமன்றப் பிரதிநிதிகள் அனைவரும் அவரவர் சார்ந்த பகுதிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் இணைந்து மக்களுக்கான நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொண்டு உணவு, மற்றும் பாதுகாப்பான உறைவிடம், மருந்துகள் முதலிய அவர்களின் அடிப்படை, அவசியமான தேவைகளை நிறைவேற்றவும்                   
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி பெய்த மழைக்கு சற்றும் குறைவில்லாத மழை. என்பதால்

கட்டமைப்புகள் ஏதும் மாறவில்லை. ஆனால் எடப்பாடி கே.பழனிச்சாமி பல இலட்சம் கோடி செலவு செய்த மோசடிக் கணக்கு அரசிடம் உள்ளது.

அவர்கள் செய்த இந்த விஞ்ஞான ஊழலை திமுக அரசு  எவ்வாறு கையாளுகிறது என்று பார்த்தால்
சென்னை பெரு மாநகராட்சி ஊழியர்களின் வேலை இந்த ஒரு நாளில் இருந்தாலும் பரவாயில்லை. நல்ல ஏற்பாடுகள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை (மற்றும்) வெள்ளம் தொடர்பான புகார்களை தெரிவிக்க  மாநகராட்சி வெளியிட்டுள்ள உதவி எண்கள் விபரம் :

1913,

04425619206,

04425619207,

04425619208,

வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்க : 9445477205 -

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா