நாவல்பட்டு காவல்துறை எஸ் எஸ் ஐ படுகொலை

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்  சிறப்பு உதவி ஆய்வாளர்  படுகொலை 


நவல்பட்டு காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக பூமிநாதன் பணியாற்றினார் இரவு ரோந்துப் பணியின் போது நவல்பட்டு ரோட்டில் மூன்று இருசக்கர வாகனத்தில் ஆடுகள் ஏற்றி வந்த நபர்களைத் தடுத்து நிறுத்தியும் அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றதால். அவர்கள் ஆடுகளைத் திருடும் கும்பலைச் சேர்ந்தவர்களா என்பதை தெரிந்துகொள்ள பூமிநாதன் அவர்களைப் பின்தொடர்ந்து விரட்டிச் சென்ற போது திருச்சிராப்பள்ளி- புதுக்கோட்டை செல்லும் சாலையில் முகாம்பிகை  கல்லூரி அருகில் களமாவூர் இரயில்வே கேட் பகுதியிலுள்ள பள்ளத்துப்பட்டிக்கு அருகே சென்ற நிலையில் ஒரு இருசக்கர வாகனத்தை அந்தஎஸ் எஸ் ஐ தடுத்து நிறுத்தியதிய பின்னர் அதிலிருந்த நபர்களை பிடித்து விட்டு சக காவலர்களுக்கு தகவல் கொடுக்க பூமி நாதன் முயன்ற போது. அந்த நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியதில் தலையில் பலத்த காயம் அடைந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல ஐஜி(பொறுப்பு) மற்றும் டிஐஜி சரவண சுந்தர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.கொலையுண்ட எஸ்எஸ்ஐ குடும்ப நிதி ரூ ஒரு கோடி அரசின் சார்பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா