தீபாவளியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரதமர் வாழ்த்து

தீபாவளியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து


தீபாவளியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

"தீபாவளி புனிதத் திருநாளை முன்னிட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் நமது மக்களுக்கு எனது மனப்பூர்வ வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தீமையை எதிர்த்து நன்மை வென்றதையும் இருளை எதிர்த்து ஒளி வென்றதையும் தீபாவளி குறிக்கிறது. நமது சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு நம்பிக்கைகளை பின்பற்றும் மக்களால் இப்பண்டிகை பெரிதும் கொண்டாடப்படுகிறது. பரஸ்பர அன்பு, நட்பு, சகோதரத்துவம் ஆகியவற்றின் செய்தியை தீபாவளி புனித பண்டிகை வழங்குகிறது. உண்மையில், நமது வளம் மற்றும் மகிழ்ச்சியை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு இது.


இந்த பண்டிகையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தூய்மையுடனும் பாதுகாப்பாகவும் கொண்டாடி சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பங்களிக்க உறுதி ஏற்போம்," என்று தமது வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.   மேலும் தந்தேராஸ் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்


தந்தேராஸ் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


“நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய தந்தேராஸ் வாழ்த்துகள். தந்தேராஸ் சிறப்பு தினத்தையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று பிரதமர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.தீபாவளித் திருநாளில் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

தீபாவளித் திருநாளில் மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்


"புனிதமான தீபாவளி  பண்டிகை நாளில் நாட்டு மக்களுக்கு அன்பான வாழ்த்துக்கள். இந்த தீபத்திருநாள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். அனைவரும் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட வாழ்த்துகிறேன்" என்று பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா