தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்த்தில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்

தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்த்தில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்


தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்த்தில் உள்ள இராணுவ ஆயுதப் படை மையத்தின் (ஏஓசி மையம்) ஏபிசி மைதானத்தில் 29 நவம்பர் 2021 முதல் 30 ஜனவரி 2022 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.


தலைமையக பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது. சிப்பாய் - தொழில்நுட்பம் (AE), சிப்பாய் பொது பனி, சிப்பாய் - வர்த்தகம், சிறந்த - விளையாட்டு வீரர்கள் (பொது வகுப்பு), சிப்பாய் கிளார்க்/ ஸ்டோர் கீப்பிங் தொழில்நுட்பக் (Clk/SKT) (இராணுவ ஆயுதப் படை மைய பணியாளர்களின் வாரிசுகளுக்கு மட்டும்) ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறது.


குத்துச்சண்டை, கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, நீச்சல், மல்யுத்தம், தடகளம், கபடி மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டு துறைகளில் தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் மாநிலம் அல்லது நாட்டிற்காக விளையாடிய வீரர்கள் விளையாட்டு வீரர்கள் (பொது வகுப்பு) பிரிவில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க, 26 நவம்பர் 2021 அன்று காலை 8.00 மணிக்கு தாபர் ஸ்டேடியம், ஏஓசி மையம் செகந்திராபாத்த்தில்,  விளையாட்டு போட்டியில் பங்கேற்க வர வேண்டும்.

இதர விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், ஏஓசி மைய தலைமையகம், கிழக்கு மாரெட்பல்லி, திரிமுல்கேரி, செகந்திராபாத், தெலுங்கானா- 500015 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். ஆள்சேர்ப்பு முகாம் பற்றிய கூடுதல் தகவலுக்கு  ஏஓசி மைய தலைமையகத்தின் மின்னஞ்சல் முகவரி- airawat0804@nic.in மற்றும் www.joinindianarmy@nic.in என்ற இணையதளத்த்தை அணுகலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா