முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை முறைப்படுத்தவும், தனியாரைத் தடை செய்யவும் வாய்ப்பு

மத்திய அரசு சமர்ப்பித்துள்ள மசோதா மூலம் இந்தியா மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீட்டு உலகமே இந்தியாவின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ரகுராம் ராஜனின் கருத்து முக்கியமானதாக உள்ளது.


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை முறைப்படுத்தவும், தனியார் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யவும் திட்டமிட்டு அதற்கான மசோதாவை சமர்ப்பித்துள்ள வேளையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் மற்றும் தமிழ்நாட்டு அரசின் பொருளாதார ஆலோசனை குழுவில் முக்கியப் பங்கு வகிக்கும் ரகுராம் ராஜன் கிரிப்டோகரன்சி குறித்து முக்கியக் கருத்தை முன்வைத்தார்.சர்வதேச கிரிப்டோகரன்சி சந்தையில் தற்போது 6000 த்திற்கும் அதிகமான கிரிப்டோ கரன்சிகள் உள்ளது, இதில் ஒரு சில மட்டுமே தாக்குப்பிடிக்கும். பல கிரிப்டோகரன்சிகளைவாங்குவதற்கு ஆட்கள் உள்ளதால் மட்டுமே  விலை உயர்கிறது சிலருக்கு விபரம் தெரியாத நபர்கள் தற்போதிருக்கும் கிரிப்டோ மோகம், 17 ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்திலிருந்த டூலிப் பூக்கள் மீதான மோகத்தைப் போல. முறைப்படுத்தப்படாத அரசின் கட்டுப்பாடிலில்லாத சிட் பண்டுகள் எப்படி ஆபத்தோ அதுபோலவே முறைப்படுத்தாத கிரிப்டோ நாணயமும்  அரசு கட்டுப்பாடிலில்லாத சீட்டுக் கம்பெனிகள் எப்படி மக்களின் பணத்தைத் திருடி மாயமானார்களோ அதே தான் முறைப்படுத்தாத கிரிப்டோ கரன்சியை வைத்துள்ள முதலீட்டாளர்கள் பாதிக்கும் வாய்ப்பு உண்டு கிரிப்டோ கரன்சிக்கு மதிப்பே இல்லை

என்பதில்லை,!.நிலையான மதிப்ப்பில்லை. இதேபோல் பேமெண்ட், நிதியியல் சேவைகளில் பயன்படுத்தும் கிரிப்டோகரன்சிகள் மதிப்புப் பெற வாய்ப்புள்ளதென்றே கூறலாம். அமெரிக்க கிரிப்டோ சந்தை 2.5 டிரில்லியன் டாலர் பிரச்சனையாக உள்ளது, முழுமையான புரிதலில்லாத காரணத்தால் இதை எப்படி முறைப்படுத்துவது என்பதிலும் குழப்பம். இந்தியாவில் கிரிப்டோ சந்தையை முறைப்படுத்த அரசு கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளத்திலிருந்து நேரடியாகத் தகவல் பெற்று, கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் பெரியதாக இருக்கும் போது அரசு நேரடியாக ஆய்வு செய்து மக்களுக்கு இது மோசடியான தளமில்லை என்பதை உறுதி செய்யும். அப்போது மக்களின் முதலீடுகள் பாதுகாக்கப்படும். இதற்கு இந்திய அரசு பிளாக்செயின் டெக்னாலஜியை பெரிய அளவில் பயன்படுத்த வேண்டிய நிலை. பிளாக்செயின் டெக்னாலஜி மூலம் பணப் பரிமாற்றத்தை மிகவும் குறைந்த செலவில் அனுப்ப முடியும், குறிப்பாக வெளிநாடுகள் மத்தியிலான பணப் பரிமாற்றத்தை பிளாக்செயின் டெக்னாலஜி மூலம் குறைந்த செலவில் வேகமாக அனுப்ப முடியும் என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் பார்வை கிரிப்டோ சந்தை முதலீடுகள் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் பெரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில், கிரிப்டோ முதலீட்டில் அதிகம் லாபம் கிடைக்கும் நிலையிலும், இந்தியாவில் இருந்து பெருமளவிலான தொகை வெளியேறி உள்ளது கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்திருக்கலாம் என அனுமானமிருக்கிறது.ஆனால் ரிசர்வ வங்கி அளித்துள்ள தரவுகள் அடிப்படையில் கிட்டதட்ட 2 பில்லியன் டாலர் அளவிலான தொகையில் சுமார் 60 சதவீத தொகை வெளிநாட்டு பயணத்தின் வாயிலாகவும், படிப்புக்காகவும் சென்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் கூறுகிறது. இதேபோல் வைப்பு நிதி, தொத்து கொள்முதல், பங்கு மற்றும் பத்திர முதலீடுகளில் செப்டம்பர் மாதம் 765 மில்லியன் டாலர் தொகை குவிந்துள்ளது. இதில் பெரும் பகுதி கிரிப்டோ சந்தைக்குச் சென்றிருக்கலாம் என்பது தான் தற்போது அனுமானம். பிட்காயின் உள்ளிட்ட சில காயின்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 3500 க்கும் மேற்பட்ட கிரிப்டோ கரன்சிகள் இருக்கின்றன. சவுதி அரேபியா மற்றும் சீனாவில் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யப்பட்டது. அனால் கனடா, ஜப்பான், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் கரன்சி பயன்படுத்த ஒழுங்குமுறை சட்டவிதிகள் உள்ளன. இந்தியாவில் சட்ட விதிமுறைகள் இதுவரை இல்லாத நிலையில் தற்போது மத்திய அரசு கொண்டு வருகிறது. எனவே நாடாளுமன்றக் கமிட்டி கிரிப்டோகரன்சி குறித்து விவாதம் செய்த பின், மசோதா கொண்டு வர பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த் சின்கா தலைமையிலான அமர்வு ஆலோசனை செய்தது. தனியார் கிரிப்டோகரன்சியைக் கட்டுப்படுத்த மசோதா  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை பெற்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இவை நடைமுறைக்கு வந்த பிறகு தனியார் கரன்சிகளை இந்தியாவில் பணமாக மக்கள் பயன்படுத்த முடியாது. ஆனால் ஆர்பிஐ ஒரு டிஜிட்டல் கரன்சியை வெளியிட உள்ளது. அதில் முதலீடு செய்யும் வகையில் சில திட்டங்கள் வரையறுக்கப்படும். தற்போது உலக அளவில் பரவியிருக்கும் பிட்காயின் உள்ளிட்ட சில கிரிப்டோகரன்சிகளை, இந்தியாவைப் பொறுத்தவரையில் அது ஒரு வெளிநாட்டு பணம் என்ற அளவில் அனுமதிக்கப்படும். மேலும் தற்போது கொண்டு வர உள்ள மசோதா, சட்டமாக்கப்பட்ட பின் 90 நாட்களில், ஒருவர் தன்னிடமிருக்கும் கிரிப்டோகரன்சி குறித்த முழு விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இல்லை என்றால் அது, கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சி செய்யும் குற்றமாகக் கருதப்பட்டு அவருக்கு ஏழு வருடம் முதல் பத்து வருடம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, ஆர்பிஐ   அறிமுகப்படுத்த உள்ள கிரிப்டோகரன்சிக்காக காத்திருப்பது நல்லது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். மேலும் மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்த உடனே, பிட்காயின், லித்தியம் உள்ளிட்ட கிரிப்டோகரன்சி மதிப்பு 18 % குறைந்தது. இதில் முதலீடு செய்தவர்கள் வேக வேகமாக இன்று  விற்பனை செய்தனர். எனவே சரிந்து மார்க்கெட் மதிப்பு குறைந்தது.

தனியார் கிரிப்ட்டோ காயின் வகையில்

1 Monero 2 Zcash

3 Decred 4 Horizen

5 Oasis Network 6 Secret

7 Flux 8 Verge

9 Status 10 iExec

11 Mobilecoin 12 Keep Network

13 Pirate chain 14 Dero

15 Phala Network 16 Haven Protocol

17 Dusk Network 18 Firo

19 Veruscoin 20 Bytecoin

21 Beam 22 Apollo currency

23 Pivx 24 Super zero Protocol

25 Oxen 26 Grin

27 Vertcoin 28 Epic Cash

29 Zano 30 Suterusu

31 Navcoin 32 Particl

33 Offshift 34 Bitcoin private

35 Wownero 36 Raze Network

37 Aeon 38 Turtle Coin

39 Crypton 40 Conceal

மேற்கண்ட 40 வகையான தனியார் தொடர்பான கிரிப்டோ கரன்சிகள் தடையாக வாய்ப்புகள் தென்படுவதாக ஒரு தகவல் உலா வருகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...