இருவேறு வாகனங்கள் விபத்தில் மூவர் பலி

இருவேறு வாகனங்கள் விபத்தில் மூவர் பலி விபரம் வருமாறு : தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் பண்டிகைக்கு சொந்த ஊர்  சென்ற நபர்கள் மீது சரக்குவாகனம் மோதி விபத்து. தந்தை,மகன் நிகழ்விடத்தில் பலி.


தேனி மாவட்டம் அணுமந்தன்பட்டி  மணி ( வயது 26) அவரது  மனைவி கௌசல்யா(வயது 22). இவர்கள் மகன் விபுசன் (வயது 3). திருப்பூரில் பணி செய்யும் மணியின் குடும்பம், தீபாவளிபீ பண்டிகைக்காக சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது தேனியில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த செயல்பாட்டிற்கு வராமலிருக்கும் புறவழிச்சாலையில் பயணத்தில். பூதிபுரம் அருகே எதிராக வந்த டிராக்டர் வாகனத்தை நிறுத்தி சாலை வழித்தடம் குறித்து கேட்டுக்கொண்டிருந்த போது கரூரிலிருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றுவதற்காக கம்பம் சென்றுகொண்டிருந்த பிக்அப் வேன் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்திலிருந்த அனைவரும் தூக்கி சாலையில் வீசப்பட்டதில்  மணியும் அவரது மூன்று வயது மகனும் நிகழ்விடத்திலேயே  பலியாயினர்.கௌசல்யா தலையில் பலத்த காயங்களுடன்  மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து பழனிச்செட்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பிக்அப் வேன் ஓட்டுனரை சந்துரு   விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு  அழைத்துச் சென்றுள்ளனர். பண்டிகைக்காக சொந்த ஊர் திரும்பிய குடும்பம் விபத்தில் சிக்கி தந்தை மற்றும் 3 வயது மகன் பலியான சம்பவம் அப் பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை முல்லிகுண்டு வனிதா பேக்கரி அருகே கார் பைக் மோதி விபத்தில் 23 வயது மதிக்கதக்க பெண் பலி. மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா