தேர்வு வாரியம் போட்டித் தேர்வுகள் தேதி அறிவிப்பு விபரம்

தமிழ்நாட்டில் அரசு நடத்தும்  பள்ளிகளில் ஆசிரியர் கல்லூரிகளில் விரிவுரையாளர் மற்றும் பேராசிரியர் பணிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. 


அரசு பாலிடெக்னிக்கில் 2017-18 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. இதன் படி பல்லாயிரக்கணக்கான நபர்கள் ஆன்லைன் மூலம விண்ணப்பித்தனர். தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது தாக்கம் பெரிதும் குறைந்து தொற்று ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ள நிலையில் 2021 டிசம்பர் மாதம் போட்டித் தேர்வு நடத்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி அறிவிப்பு வெளியிட்டார். அதன் படி  டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை கணினி வழியாக தேர்வு நடத்தப்படுமென்றும் போட்டித் தேர்வு அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்       http://trb.tn.nic.in/pg2021/Notification.pdf வெளியிடப்பட்டுள்ளது. அதில் டிசம்பர் 8 ஆம் தேதி (காலை) இயற்பியல், பிரிண்டிங் டெக், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்.         (மதியம்) ஆங்கிலம், உற்பத்தி பொறியியல், ஐசிஇ, மார்டன் ஆபிஸ் பிராக்டீஸ்

டிசம்பர் 9 ஆம் தேதி- (காலை) மெக். இன்ஜினீரிங் - 1

(மதியம்) மெக். இன்ஜினீரிங் - 2          டிசம்பர் 10 -ஆம் தேதி (காலை) வேதியியல்

(மாலை) கணினி அறிவியல் பொறியியல்   டிசம்பர் 11 -ஆம் தேதி (காலை) இஇஇ

(மாலை) கணக்கு

 டிசம்பர் 12 -ஆம் தேதி (காலை) சிவில் இன்ஜினீரிங் மற்றும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் போட்டித் தேர்விற்கு விண்ணப்பித்த நபர்களுக்கு ஹால் டிக்கெட்கள் தேர்வு நடைபெறுவதற்கு ஒருவாரம் முன்னதாக இணையதளத்தில் வெளியிடப்படுமெனனக் கூறப்பட்டுள்ளது.  தேர்வு நடைபெறும் தேதிகள் நிர்வாக வசதிகளைப் பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்த அறிவிப்பு போட்டித் தேர்விற்கு தயாராகி வரும் நபர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாகும் தற்போது படித்து தேர்விற்கு  தயாராகி வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா