சாத் பூஜையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து

சாத் பூஜையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து


சாத் பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ளச் செய்தியில், “சாத் பூஜையை முன்னிட்டு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் நமது சக குடிமக்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


சாத் பூஜை, நாட்டில் கொண்டாடப்படும் மிகவும் பழமையான பண்டிகைகளில் ஒன்றாகும்.  அஸ்தனமாகும் சூரியனுக்கு ‘அர்கியா’ வழங்குவதே இதன் சிறப்பு அம்சமாகும். பக்தர்கள்,  இந்நாளில் கடுமையான விரதம் இருந்து, ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் புனித நீராடுவதுடன்  பண்டிகை நிறைவடையும்.  இந்தப் பண்டிகை, சூரிய பகவான் மற்றும் இயற்கையுடன் நாம் கொண்டுள்ள உறவை வெளிப்படுத்தும் பிரத்யேக பண்டிகை ஆகும்.இந்தப் பண்டிகை, இயற்கையுடன் நாம் கொண்டுள்ள உறவை வலுப்படுத்துவதுடன், நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவுகிறது”.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா