மின்துறையில் எரிசக்தி சேமிப்பை மேம்படுத்துவதற்கான விரிவான கொள்கை கட்டமைப்பு குறித்த அறிக்கை' பற்றிய விவாதம்

மின்துறையில் எரிசக்தி சேமிப்பை மேம்படுத்துவதற்கான விரிவான கொள்கை கட்டமைப்பு குறித்த அறிக்கை' பற்றிய விவாதத்திற்கு மின்துறை அமைச்சர் தலைமை வகித்தார்


மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளர்கள், பிஎஸ்பி டெவலப்பர்கள் மற்றும் பேட்டரி உற்பத்தியாளர்கள் ஆகியோருடனான கூட்டத்திற்கு மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர் கே சிங் காணொலி மூலம் இன்று தலைமை வகித்தார்.


'மின்துறையில் எரிசக்தி சேமிப்பை மேம்படுத்துவதற்கான விரிவான கொள்கை கட்டமைப்பு குறித்த அறிக்கை' பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


கூட்டத்தில் பேசிய அமைச்சர், எரிசக்தி வீணாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்றும், உபரியாக இருக்கும் அனைத்து வகை எரிசக்தியையும் சேமித்து வைக்க எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்ற இலக்கை எட்டுவதற்காக, சூரிய மற்றும் காற்றாலை துறைகளில் வரவிருக்கும் திட்டங்களுக்கு ஏற்ப ஆண்டு வாரியாக சேமிப்புத் திறனின் தேவையை உருவாக்க அமைச்சர் அறிவுறுத்தினார்.


 தற்போதுள்ள நீர் மின்சார திட்டங்களுக்கு அருகில் உள்ள பம்ப் ஹைட்ரோ தளங்களை ஆய்வு செய்து அடையாளம் காணுமாறு


அனைத்து நீர் மின்சார மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா